காவல்துறை உயர் அதிகாரிகள் தொடர்பில் வெளியான தகவல்
சிறைக் கைதிகளும் மனிதர்களே என கூறிக்கொண்டு இருப்பதால் மாத்திரம் எந்தவிதமான பயனுமில்லை. மனிதாபிமான ரீதியாக அவர்களை நடத்த வேண்டும் என தெரிவிக்கும் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, நாட்டில் போதைபொருள் பரவுவதற்கு போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு அரசியல்வாதிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைப்பதாகவும் தெரிவித்தார்.
சிறைச்சாலைக் கட்டமைப்பை முழுமையாக மாற்றியமைக்க வேண்டும். இதற்காக 1934ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதற்தடவையாக சிறைச்சாலைகள் ஒழுங்கு விதிகளை தற்போதைய காலத்துக்கு ஏற்றவாறு சமர்ப்பித்துள்ளேன். சிறைக் கைதிகளும் மனிதர்களே என கூறிக்கொண்டு இருப்பதால் மாத்திரம் எந்தவிதமான பயனுமில்லை. மனிதாபிமான ரீதியாக அவர்களை நடத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
கைதிகளின் கௌரவம்
எந்த குற்றத்துக்காக சிறைச்சாலைக்கு வருகிறார்கள் என்பது முக்கியமல்ல. சிறைச்சாலை அதிகாரிகள், கைதிகள் அனைவரதும் கௌரவத்தைப் பாதுகாக்க வேண்டும்.
சிறு சிறு குறைபாடுகள் ஏற்பட்டுள்ளபோதிலும் தற்போதைய சிறைச்சாலைகள் திணைக்களம் கைதிகளின் உரிமைகளை சிறப்பாகப் பாதுகாப்பதாகவும் தெரிவித்தார்.
போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள்
85 சதவீதமான சிறைக்
கைதிகள் போதைப்பொருள்
குற்றச்சாட்டுக்களைக்
கொண்டவர்கள். இதில்
95 சதவீதமானவர்கள்
போதைப்பொருளுக்கு
அடிமையானவர்கள் எனவும் அவர் தெரிவித்தார்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
