பிரித்தானியா செல்லவுள்ளோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
இலங்கை உள்ளிட்ட நாடுகளிலிருந்து பிரித்தானியாவுக்கு தொழில் மற்றும் கல்வி வீசாவுக்கு விண்ணப்பிப்போருக்கு எதிராகக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு்ள்ளது.
பிரித்தானிய உள்நாட்டு அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது.
அதன்படி இலங்கை, பாகிஸ்தான் மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக தொழில் மற்றும் கல்வி வீசா விண்ணப்பிக்கும் விடயத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன.
தொழில் அல்லது கல்வி வீசா
இந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் அநேகமாகத் தொழில் அல்லது கல்வி வீசாவில் சட்டரீதியாக பிரித்தானியாவிற்குள் பிரவேசித்து, பின்னர் அரசியல் தஞ்சம் கோருகின்றனர்.
இதனால் பிரித்தானியாவின் வரி செலுத்துனர்களது நிதி வீணடிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுப்பப்படுகிறது.
அதற்கு அமையவே இலங்கை போன்ற நாடுகளிலிருந்து தொழில் மற்றும் கல்வி வீசாவுக்கு விண்ணப்பிப்போர் தொடர்பாகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன.
இதுதொடர்பான முறைமை ஒன்று தற்போது வகுக்கப்பட்டு வருவதாகவும், பிரித்தானிய உள்நாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.
