திருட்டுத்தனமாக எதையும் செய்யவில்லை இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட தகவல்
திருட்டுத்தனமாக ஆளும் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கவில்லை என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மக்களுடன் நேரடியாக தொடர்புகளை பேணுவதன் காரணமாகவே நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க தீர்மானிக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் புதிய பிரவாகம் பரவுவதை தடுக்கும் முன்னேற்பாடாக இத்திட்டம் செயற்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். சுகாதார சேவை ஊழியர்கள், பாதுகாப்பு சேவை ஊழியர்கள், பொலிஸார் உள்ளிட்டவர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அந்த வரிசையில் அடுத்து இருப்பது அரசியல்வாதிகள் எனவும் மக்களை அடிக்கடி சந்திப்பவர்கள் இவர்கள் என்பதால் கொரோனா தொற்று ஏற்படுவதை அல்லது பரவலை தடுக்க தடுப்பூசி அவசியம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.