அரிசி இறக்குமதி குறித்து வெளியான தகவல்

Mahinda Amaraweera Sri Lanka Sri lanka tea
By Sathangani Jan 30, 2024 02:56 AM GMT
Report

இலங்கை அரிசி தேவையில் தன்னிறைவு பெற்றுள்ளதால், 2024இல் அரிசி இறக்குமதி செய்ய எதிர்பார்க்கவில்லை என கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டில் இலங்கை தன்னிறைவடையும் வகையில், நெல், சோளம், உருளைக்கிழங்கு மற்றும் மிளகாய் பயிர்களுக்கு முன்னுரிமை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

அதிபர் ஊடக மையத்தில் நேற்று(29) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே மகிந்த அமரவீர இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,

கொழும்பில் அரசுக்கெதிராக பாரிய ஆர்ப்பாட்டம்

கொழும்பில் அரசுக்கெதிராக பாரிய ஆர்ப்பாட்டம்


“கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு என்ற வகையில், இந்த ஆண்டு விவசாயம் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அபிவிருத்திக்கான இலக்கு நோக்கிய வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.

2023 ஆம் ஆண்டில், நாட்டில் சிறு போகத்திலும் பெரும் போகத்திலும் உரங்களை கொள்வனவு செய்வதற்கு நிதி மானியங்களுக்காக சுமார் 22 பில்லியன் ரூபாவை செலவிட்டோம். அத்துடன் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் 13 பில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது.

அதன்படி 2022ஆம் ஆண்டு 8 மெட்ரிக் தொன் அரிசி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட போதிலும் 2023ஆம் ஆண்டு அரிசி இறக்குமதி செய்யப்படவில்லை. நம் நாட்டு விவசாயிகள் உற்பத்தி செய்த அரிசியை இந்த நாட்டு மக்கள் வருடம் முழுவதும் உட்கொண்டார்கள் என்றே கூற வேண்டும். நெருக்கடியான நிலையிலும், அரிசியில் தன்னிறைவு பெற்றுள்ளதால், இந்த ஆண்டு அரிசியை இறக்குமதி செய்ய எதிர்பார்க்கவில்லை.

கடந்த ஆண்டைப் போலவே வறட்சி மற்றும் வெள்ளத்தால் நெல் விளைச்சல் பாதிக்கப்பட்டது. வறட்சியால் 65,000 ஏக்கரும், கனமழையால் 100,000 ஏக்கரும் சேதமடைந்துள்ளன. வறட்சியினால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு இழப்பீடு வழங்க அரசாங்கம் 1,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. சுமார் 700 மில்லியன் ரூபா ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.

காசாவில் கனேடிய நாட்டவர் மாயம், கடத்தப்பட்டாரா..!

காசாவில் கனேடிய நாட்டவர் மாயம், கடத்தப்பட்டாரா..!


கன மழையால் விவசாயம் பாதிப்பு 

மேலும், கனமழையால் பாரிய அளவில் மரக்கறிப் பயிர்கள் அழிந்ததே மரக்கறி விலை உயர்வுக்கு காரணமாகும். சில விவசாயிகள் ஒரே விவசாய நிலத்தில் பலமுறை காய்கறி விதைகளை பயிரிட்டனர். ஆனால் அவை மழையால் அழிந்துவிட்டன.

ஆனால், விவசாயிகளுக்கு நாங்கள் வழங்கிய வலை வீடுகளில் பயிர் செய்ததால், ஓரளவுக்கு மரக்கறிகள் சந்தைக்கு வந்தன. இன்னும் இரண்டு மாதங்களில் மரக்கறிகளின் விலை இயல்பு நிலைக்குத் திரும்பும்.

அரிசி இறக்குமதி குறித்து வெளியான தகவல் | Information Released On Rice Import In Sri Lanka

2024 ஆம் ஆண்டில், நமது தேசிய நுகர்வு இலக்கை அடைய நெல், சோளம், உருளைக்கிழங்கு மற்றும் மிளகாய் ஆகிய 4 வகையான பயிர்களின் உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனாலும் ஏனைய பயிர் உற்பத்திகளை ஊக்குவிப்பதோடு, இந்த 4 வகைப் பயிர்களை முக்கிய இலக்காகக் கொண்டுள்ளோம். பெரிய வெங்காய பயிர்ச் செய்கையுடன், சின்ன வெங்காய உற்பத்தி வீழ்ச்சியடைந்தது.

எனவே, இந்த ஆண்டு மீண்டும் சின்ன வெங்காய பயர்ச் செய்கையை ஊக்குவிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அதன்படி, மொணராகலை தெலுல்ல, யாழ்ப்பாணம் மற்றும் குருநாகல் மொரகொல்லாகம, நியந்தகம ஆகிய இடங்களில் சின்ன வெங்காயச் செய்கையை பிரபலப்படுத்த தீர்மானித்துள்ளோம்.

இந்தியா தொடர்பில் கனடா வெளியிட்ட அறிவிப்பு : சீராகும் உறவு

இந்தியா தொடர்பில் கனடா வெளியிட்ட அறிவிப்பு : சீராகும் உறவு

மானிய விலையில் உரங்கள்

இதற்கு இணையாக பெருந்தோட்டத் துறையில் பல முக்கிய தீர்மானங்களை இவ்வருடம் நடைமுறைப்படுத்துகின்றோம். அதன் முதல் கட்டத்தை கடந்த ஜனவரி 1ஆம் திகதி முதல் ஆரம்பித்துள்ளோம். அதன்படி, தேயிலை கொழுந்துகளின் தரத்தை மேம்படுத்துவதற்காக பி 60 கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டது.

மேலும், தேயிலை, இறப்பர் மற்றும் தென்னைப் பயிர்ச்செய்கைக்கு இரண்டு அரசாங்க உர நிறுவனங்களின் மூலம் உரங்களை மானிய விலையில் வழங்கும் திட்டத்தையும் ஆரம்பிக்க உள்ளோம். இதன் கீழ் தேயிலைக்காக தயாரிக்கப்பட்ட விசேட உரம், மானிய விலையில் வழங்கும் நடவடிக்கை நேற்று ஆரம்பிக்கப்பட்டது.

அரிசி இறக்குமதி குறித்து வெளியான தகவல் | Information Released On Rice Import In Sri Lanka

தேயிலைப் பயிர்ச்செய்கையின் விளைச்சலை அதிகரிப்பதற்காக, அனைத்து தேயிலை உரங்களையும் அரசாங்கத்திற்கு சொந்தமான இரண்டு உர நிறுவனங்களான கொமர்ஷல் உர நிறுவனம் மற்றும் லங்கா உர நிறுவனம் மூலம் உற்பத்தி செய்ய விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

மிக உயர்ந்த தரமான தேயிலை உரம் அரசாங்கத்திற்கு சொந்தமான இரண்டு உர நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்பட்டு, தேயிலை விவசாயிகளுக்கு வழங்கப்படும். இதன்படி தேயிலை விவசாயிகளுக்கு வற் வரியுடன் விற்பனை செய்யப்படும் தொகையை விட 2,000 ரூபா குறைந்த விலையில் இந்த உரத்தை வழங்குவோம்.

இந்த விலை குறைப்பு சந்தை விலையுடன் ஒப்பிடும் போது சுமார் 50 சதவீதம் குறைப்பு என்று கூறலாம். இதன்படி, T-200 மற்றும் T-750 தேயிலை உர மூட்டை ஒன்றின் விலை 5,500 ரூபாவாகவும், U-709 மற்றும் U-834 தேயிலை உரத்தின் விலை 7,735 ரூபாவாகவும் குறைக்கப்படவுள்ளது.

விடுமுறை நாட்களிலும் ஆசிரியர்களின் உன்னத பணி : பெற்றோர் பாராட்டு

விடுமுறை நாட்களிலும் ஆசிரியர்களின் உன்னத பணி : பெற்றோர் பாராட்டு

தேயிலை அறுவடை 

மேலும், உரங்களை முறையாகப் பயன்படுத்துவதுடன், புதிய பயிர்ச் செய்கை தொழில்நுட்பமும் நமது தேயிலை உற்பத்திக்கு அறிமுகப்படுத்தப்படும். மேலும், அதிக அடர்த்தி பயிர்ச்செய்கை முறையின் கீழ் 59 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

அந்த 55 திட்டங்கள் மிகவும் வெற்றிகரமானவை. ஒரு மாதத்தில் ஒரு ஏக்கரில் சுமார் 1,350 கிலோ தேயிலை கொழுந்துகளை அறுவடை செய்கின்றனர். இந்த ஆண்டு இத்திட்டத்திற்காக 1,000 மில்லியன் ரூபா செலவிட உள்ளோம்.

அரிசி இறக்குமதி குறித்து வெளியான தகவல் | Information Released On Rice Import In Sri Lanka

மானிய விலையில் தேயிலை உரம் வழங்குவதற்கான முத்தரப்பு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கை தேயிலை சபை மற்றும் சிறிய தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகார சபை ஆகியன அரசாங்கத்திற்கு சொந்தமான இரண்டு உர நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டன.

இலங்கையில் தேயிலை பயிர்ச் செய்கையின் விளைச்சலை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு இந்த மானிய விலையில் உரம் வழங்குவது பெரும் உதவியாக இருக்கும் என நான் நம்புகிறேன்.

அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் தொலைநோக்கு அரசியல் பார்வையினால் இவ்வாறான நடவடிக்கைகள் சாத்தியமாகியுள்ளன. பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு கமத்தொழில் அமைச்சுடன் இணைக்கப்படாவிட்டால் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது சாத்தியமற்றது” என  மகிந்த அமரவீர மேலும் தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிலாவத்தை, Lampertheim, Germany

03 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Mühlacker, Germany

02 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில், Wuppertal, Germany, Pinner, United Kingdom

03 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், கொழும்பு, India

24 Mar, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, கொழும்பு, New Jersey, United States, Winnipeg, Canada

28 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

02 Mar, 2025
மரண அறிவித்தல்

வேம்படி தாளையடி, Vejle, Denmark

31 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, சுவிஸ், Switzerland, Scarborough, Canada, Toronto, Canada

01 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, Le Bourget, France

28 Feb, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

24 Mar, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், கொழும்பு

01 Apr, 2015
மரண அறிவித்தல்

மீசாலை, மிலான், Italy

29 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், கைதடி

29 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கத்தானை, Mississauga, Canada

26 Mar, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, வெள்ளவத்தை

29 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

31 Mar, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கிளிநொச்சி, Toronto, Canada

31 Mar, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், Wanstead, United Kingdom

31 Mar, 2020
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, பேர்லின், Germany

14 Mar, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Homburg, Germany

02 Apr, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Allschwil, Switzerland

30 Mar, 2017
20ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, வவுனியா

31 Mar, 2005
மரண அறிவித்தல்

கரவெட்டி, Savigny-le-Temple, France

27 Mar, 2025
மரண அறிவித்தல்

Myliddy, Liverpool, United Kingdom, Gerrards Cross, United Kingdom

25 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, பொத்துவில்

02 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, Toronto, Canada

10 Apr, 2024
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, England, United Kingdom

25 Mar, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025