உக்ரைனில் பணியாற்றிய இலங்கையர் தொடர்பில் வெளியான தகவல்
srilanka
ukrain
safety
By Sumithiran
உக்ரைனில் பணியாற்றி வந்த 32 இலங்கையர்கள் அந்நாட்டின் எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள 4 நாடுகளின் ஊடாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
துருக்கியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகம் இதனைத் தெரிவித்துள்ளது.
மேலும் 30 இலங்கையர்கள் உக்ரைனில் மீதமிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை உக்ரைனில் சிக்கியுள்ள தமது நாட்டவர்களை மீட்க இந்திய அரசாங்கம் ‘ஒப்பரேசன் கங்கா’ என பெயர் பொறித்த மீட்பு நடவடிக்கையை துரித கதியில் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
