பாகிஸ்தானில் எரித்துக் கொலை செய்யப்பட்ட இலங்கையர் தொடர்பில் கிராமவாசிகள் வெளியிட்ட தகவல்!..
பாகிஸ்தானில் எரித்து கொலை செய்யப்பட்ட இலங்கையர் குறித்து புதிய தகவல்களை உள்ளூர்வாசிகள் வெளியிட்டுள்ளனர் என சர்வதேச ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.
பாகிஸ்தான் - பஞ்சாப் மாகாணத்தின் சியல்கோட் மாவட்டத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இலங்கையைச் சேர்ந்த பிரியந்த தியவதன (Priyantha Diyawadana) (வயது - 40) பொது மேலாளராக பணியாற்றி வந்துள்ளார்.
இவரது அலுவலக சுவர் அருகே தெஹ்ரீக் - இ - லபைக் என்ற அமைப்பின் மதப் பிரசார போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அதை பிரியந்த கிழித்து குப்பைத் தொட்டியில் போட்டுள்ளார்.
இதைப் பார்த்த தொழிற்சாலை ஊழியர்கள் அந்த அமைப்பினரிடம் தெரிவித்துள்ளனர். உடனே அந்த அமைப்பைச் சேர்ந்த நுாற்றுக்கணக்கானோர் தொழிற்சாலையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அத்துடன் அலுவலகத்தில் இருந்த பிரியந்தவை வெளியே இழுத்து வந்து கண்மூடித்தனமாக தாக்கி அவரை உயிருடன் தீ வைத்து எரித்தனர்.
தீயின் வேதனை தாங்காமல் அலறித் துடித்த பிரியந்தா சில நிமிடங்களில் உயிரிழந்துள்ளார். அந்த சமயத்தில் அந்த கும்பல் அல்லாவு அக்பர் என கோஷம் போட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டுளன்ளதுடன் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கபப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் உயிரிழந்த பிரியந்த மிக சிறந்த மனிதராக உள்ளூர்வாசிகளால் அறியப்பட்டுள்ளார் என தற்போது தெரியவந்துள்ளது.
உயிரிழந்த பிரியந்தவுக்கு மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். பிரியந்த மிகவும் ஒழுக்கமானவர். கடின உழைப்பாளியான அவர் அதிக தெய்வ பக்தி கொண்டவர் என புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.
You May Like This