எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்
எதிர்காலத்தில் விலை சூத்திரத்தின் அடிப்படையில் எரிபொருளுக்கான விலை திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர(dayasiri jayasekara) வாய்மூல பதில்களை எதிர்பார்த்து கேட்ட கேள்விக்கு எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி(kumara jayakody) சமர்ப்பித்த பதிலில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலைச் சூத்திரத்தின் பிரகாரம் விலையில் திருத்தம்
தற்போதைய அரசாங்கத்தின் கீழ், 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 ஆம் திகதி முதல் 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வரையில் விலைச் சூத்திரத்தின் பிரகாரம் 2 தடவைகள் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
எனினும், எரிபொருள் விலை திருத்தத்திற்காக சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் இலாபம் அல்லது நட்டம் தொடர்பில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
உலக சந்தையில் எரிபொருள் விலை
இதற்கிடையில், உலக சந்தையில் எரிபொருள் விலை குறைந்ததன் நன்மை மாதாந்திர எரிபொருள் விலையில் சீர்செய்யப்படும் எனவும் பதிலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை எரிபொருள் விலை சூத்திரம் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவினால் அறிமுகம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |