இலங்கையில் ஒமைக்ரோன் மாறுபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் வெளியான தகவல்!
இலங்கையில் 2022 ஆம் ஆண்டின் கடந்த மூன்று வாரங்களில் ஒமைக்ரோன் மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட மேலும் 75 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிறி ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
ஜனவரி முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் வாரங்களில் பெற்றுக்கொள்ளப்பட்ட 78 மாதிரிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் ஊடாகவே, இந்த 75 ஒமைக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சிறி ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை மற்றும் மூலக்கூறு பிரிவின் பிரதானி டொக்டர் சந்திம ஜீவந்தர (Dr. Chandima Jeevandara) தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இதுவரை 283 ஒமைக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொழும்பு, அவிசாவளை, பொரலஸ்கமுவ, ஹோமாகம, கட்டுகொட, கொஸ்கம, மடபாத்த, பாதுக்க, பரகுடாவ, வெல்லம்பிட்டிய, பதுளை, காலி, கொலன்னாவ, கல்கிஸ்ஸ, நுகேகொட மற்றும் ருவன்வெல்ல ஆகிய பகுதிகளிலிருந்தே இந்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன், அடையாளம் காணப்பட்டவர்களில் இந்தியாவிலிருந்து நாடு திரும்பியவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
