மாவீர்களுக்கு தமிழரசு கட்சி இழைக்கும் பெரும் அநீதி! முன்னாள் எம்.பி ஆவேசம்
தமிழரசு கட்சி தமிழர்களுடைய 70 வருட சமஸ்டி கோரிக்கை, வடகிழக்கு இணைப்பு, சுயநிர்ணய உரிமையை என்பவற்றை கைவிட்டு பௌத்தம் அரச மதம் என்பதை ஏற்றுக் கொண்டு ஒற்றையாட்சிக்குள் தீர்வுக்கு சம்மதம் தெரிவித்துள்ளமை மாவீர்களுக்கு செய்யப்படும் மிகப் பெரும் அநீதி என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை கலாச்சார மண்டபத்தில் மாவீர்களின் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (21) இடம்பெற்றிருந்த போது அவர் மேற்கண்ட விடயத்தை கூறியுள்ளார்.
ஒற்றையாட்சி அரசியல் அமைப்பு
அதன்போது, மேலும் கருத்து வெளியிட்ட அவர், “ உங்களுடைய பிள்ளைகள் ஒற்றையாட்சியை ஏற்க மறுத்து உயிர் கொடுத்து 15 ஆண்டுகள் இன்று கடந்துள்ள நிலையில் எங்களுடைய மக்களால் தெரிவு செய்யப்பட்ட தலைவர்களின் ஆதரவுடன் இந்த அநுரகுமார அரசாங்கம் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை கொண்டு வந்து நிறைவேற்ற தயாராகி கொண்டுள்ளனர்.

ஆகவே மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் அதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள கூடாது.
19ம் திகதி ஜனாதிபதிக்கும் தமிழரசு கட்சிக்கும் இடையே சந்திப்பு இடம்பெற்றது, இதில் தமிழர்களுடைய 70 வருட கால சமஷ்டி கோரிக்கையை கைவிட்டு வடகிழக்கு இணைப்பு, சுயநிர்ணய உரிமையை கைவிட்டு பௌத்தம் அரச மதம் என்பதை ஏற்றுக் கொண்டு ஒற்றையாட்சிக்குள் ஒரு தீர்வுக்கு சம்மதம் தெரிவித்து விட்டு வந்துள்ளனர்.
அது மிகப் பெரும் அநியாயம் அது மாவீர்களுக்கு செய்யப்படும் ஒரு அநீதி இந்த ஒற்றையாட்சி நிராகரிக்கப்பட்டு தமிழர்களுடைய தேசம் அங்கீகரிக்கப்பட்டு தீர்வு எட்டப்பட்டால் நீங்கள் மாவீர்களுடைய அம்மாக்கள் அப்பாக்கள் ஆனால் ஒற்றையாட்சி திணிக்கப்பட்டு தமிழர்கள் ஏற்றக் கொள்ளப்படுவார்களாக இருந்தால் ஒற்றையாட்சியை எதிர்த்து போராடியவர்கள் சமூகவிரோதிகள் என இலங்கையின் வரலாறு எழுதும் என்பதுடன் இந்த மண்ணில் நீங்கள் முற்று முழுதாக அழிக்கப்படுவார்கள்.
அநுர சட்டத்திற்கு அனைவரும் சமம் என தெரிவித்து திருகோணமலையில் புத்தர் சிலையை நிறுவி இருக்கிறார் எனவே அவர் பௌத்தத்திற்கு அடிமை என்பதை நிரூபித்துள்ளார்” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இறக்கைகள் வெட்டப்பட்ட நிலையில் கலகம் செய்வாரா பிமல்..!
3 நாட்கள் முன்