மொட்டு அரசு இலங்கை முஸ்லிம்களின் தொன்மையை திட்டமிட்டு அழித்துள்ளமை பாரிய அநீதியாகும் - இம்ரான் மகரூப்

Srilanka government Muslims destroyed Taptar Jaylani Minara antiquities injustice
By MKkamshan Feb 25, 2022 02:33 PM GMT
Report

இந்த அரசாங்கம் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றுத் தொன்மையான தப்தர் ஜெய்லானி மினாராவை திட்டமிட்டு அழித்துள்ளமை பாரிய அநீதியாகும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் (Imran Maharoof) தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இது தொடர்பில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

"தப்தர் ஜெய்லானி போர்த்துக்கேயர் வருகைக்கு முன்னுள்ள தொன்மைவாய்ந்த பள்ளிவாசலாகும். இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றுச் சின்னங்களுள் இதுவும் மிக முக்கியமான ஒன்று. இதற்கான வரலாற்று ஆதாரங்கள் பலவுள்ளன.

சிரேஷ்ட ஊடகவியலாளர் லெத்தீப் பாருக் இது தொடர்பாக சிறந்ததொரு கட்டுரையை எழுதியுள்ளார்.

இந்தப் பள்ளிவாசல் குறித்து இரத்தினபுரி கச்சேரியில் பணிபுரிந்த ஆங்கிலேய அரசாங்க அதிபர்கள் தமது தினக் குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளார்கள். எச்.மூயாட்ஸ் 13 ஜனவரி 1857 இலும், எச்.வேஸ் 20 மார்ச் 1887 இலும், ஆர்.பி.ஹெலிங்கஸ் 12 பெப்ரவரி 1910 இலும் தமது தினக் குறிப்பில் ஜெய்லானி பள்ளிவாசல் குறித்து பதிவு செய்துள்ளார்கள்.

அதேபோல ஜீ.கூக்ஸன் 12 ஜனவரி 1911 இலும், ஆர்.என்.தைனி 26 மார்ச் 1914 இலும், ஜீ.எச்.கொலின்ஸ் 1922 இலும் தமது தினக் குறிப்பில் இப்பள்ளிவாசல் குறித்து பதிவு செய்துள்ளார்கள். இதனை விட இப்பள்ளிவாசலின்  தொன்மை குறித்து இன்னும் சில வரலாற்று ஆதாரங்களும் உள்ளன.

இது இவ்விதமிருக்க சிறிமாவின்  சிறி லங்கா சுதந்திரக் கட்சி ஆட்சிக்காலத்தில் 1971 இல் தான் இங்கு தாதுகோபுரம் அமைக்கப்பட்டது. அப்போது கலாசார அமைச்சின் செயலாளராக இருந்த கலாநிதி நிசங்க விஜேரத்ன இதனை நிர்மானித்ததோடு அவர் தான் இந்தத் தாதுகோபுரத்திற்கு 2000 வருட வரலாறு உண்டு என்றும் குறிப்பிட்டார்.

21 ஜனவரி 1971 தவச பத்திரிகையில் வெளிவந்த கட்டுரையில் கிரியல்ல ஞானவிமல தேரர்  தெரிவிக்கையில்  புதிதாக தாதுகோபுரம் நிர்மானிக்கப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டுள்ளார். அவர் தொல்லியல் பிரதி ஆணையாளர் சார்ல்ஸ் கொடகும்புரவுடன் 5 தடவை இப்பகுதிக்கு விஜயம் செய்து பரிசீலித்ததாகவும் எனினும், அங்கு பௌத்த கலாசாரத்துக்கான தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதிலிருந்து இதற்கு முன் அங்கு தாதுகோபுரம் இருக்கவில்லை என்பது தெளிவாகின்றது.

13 செப்டம்பர் 1973 இல் தொல்லியல் திணைக்களம் 3 மொழிகளிலும் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கையில்  முஸ்லிம்களின் வணக்க வழிபாடுகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக் கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சுச் செயலாளராக இருந்த போது அவரது ஆசிர்வாதத்துடன் தடம் பதித்து இன்றும் அவரால் போசிக்கப்பட்டு வரும் ஞானசார தேரர் தான் வெசாக் கொண்டாட்டத்தை  கொண்டாட வேண்டும் என்ற கோசத்தை 2013 மார்ச் 17 இல் முன் வைத்தார்.

இந்தக் கோசத்துக்கு செயல்வடிவம் கொடுக்கும் செயற்பாடுகளையே அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தற்போது முன்னெடுத்து வருகின்றார்.

இதன் பிரதிபலிப்பு தான் தற்போது இடம்பெற்றுள்ள வரலாற்றுத் தொன்மைவாய்ந்த ஜெய்லானி பள்ளிவாசல் மினாரா அழிப்பாகும். அரச தலைவர் இவ்வாறு உறுதியாகச் செயற்படுவதற்கு அவருக்கு பலத்தைப் பெற்றுக்கொடுத்தவர்கள் யார் என்பதை முஸ்லிம் சமுகம் மீண்டும் ஞாபகப் படுத்திக் கொள்ள வேண்டும்.

நாடாளுமன்ற உறுப்பினர் அதாவுல்லா உள்ளிட்ட முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20க்கு ஆதரவாக வாக்களித்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கி அரச தலைவருக்கு பலத்தைப் பெற்றுக்கொடுத்தமையே இதற்கு காரணம்.

இந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமூகத்தைப் பற்றி அக்கரையின்றி செயற்பட்டதன் விளைவுகனையே இப்போது நாம் அனுபவித்து வருகின்றோம்.

இந்த அரசினால் முஸ்லிம்களுக்கு என்ன அநியாயங்கள் நடந்தாலும் இந்த அரசுக்கு மூன்றில் இரண்டு பெரும்பன்மையைக் கொடுத்து இன்னமும் பலப்படுத்திக் கொண்டிருக்கும் இந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாய்மூடி மௌனிகளாக இருப்பது குறித்து நான் மிகவும் கவலையடைகின்றேன்.

காபட் வீதிக்கும், ஒப்பந்தங்களுக்கும் பேரம் போகாது சமூகத்தின் பாதிப்புகள் குறித்து பேச இவர்கள் முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கண்ணைக் குத்தியபின் வரையப்படுகின்ற அழகிய ஓவியங்கள் எமக்கு எந்தப்பலனும் தரப்போவதில்லை. இதைப்போன்று தான் சமுகத்திதன் இருப்புக்கான ஆதாரங்களை அழித்து சிறுசிறு சலுகைகளைப் பெற்றுக் கொள்வதால் சமுகத்திற்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை என்பதை இவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்" என அவர் தெரிவித்துள்ளார்.


Gallery
ReeCha
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

மதவுவைத்தகுளம், பாவற்குளம், கரம்பைமடு

16 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் மண்கும்பான் கிழக்கு, Jaffna, Ivry-sur-Seine, France, புங்குடுதீவு 1ம் வட்டாரம்

12 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், London, United Kingdom

26 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025