மோசமடையும் காலி சிறைச்சாலையின் நிலைமை
காலி சிறைச்சாலையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மேலும் இரு கைதிகள் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றையதினம் ஐந்து கைதிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று(06) மேலும் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 07 கைதிகள் தற்போது கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக பரிசோதனை
அதேவேளை, நேற்று அனுமதிக்கப்பட்ட கைதிகளின் மாதிரிகளை மேலதிக பரிசோதனைகளுக்காக கொழும்பு மருத்துவ பரிசோதனை நிறுவனத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்நிலையில், காலி சிறைச்சாலையில் கைதி ஒருவர் மூளைக் காய்ச்சலால் உயிரிழந்ததுடன், அதன் பின்னர் பல கைதிகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும், காய்ச்சல் காரணமாக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாத்தறை சிறைச்சாலை கைதிகள் அனைவரும் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளதாக சிறைச்சாலை தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |