குடைபிடித்து பரீட்சை எழுதிய மாணவர்கள் -கல்வியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு
பரீட்சை எழுதிய மாணவர்களின் அவலம்
வகுப்பறையில் மழை வெள்ளத்துக்குள் குடைபிடித்து சாதாரணதர பரீட்சையை எழுதிய மாணவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கல்வி அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் இந்த விசாரணை பரீட்சைகள் திணைக்களத்தினால் நடத்தப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சு விடுத்த உத்தரவு
வகுப்பறைத் தேர்வு, மழையை அடுத்து வகுப்பறைகளை மாற்றத் தவறியது, பரீட்சைகள் திணைக்களத்திற்கு முறைப்பாடு அளிக்கத் தவறியது போன்றவை குறித்தும் விசாரணை நடத்தப்படவுள்ளது.
This is the shame of Sri Lanka. O’ Levels students having to sit for their exams with their umbrellas. ??? pic.twitter.com/PxnhneD4oo
— Shiraz Latiff (@Shirazlatiff) May 31, 2022
நேற்றைய தினம் மாணவர்கள் மழை நீர் சொட்டும் வகுப்பறைகளில் குடைபிடித்துக்கொண்டு பரீட்சைக்கு தோற்றியது தொடர்பான புகைப்படங்கள் சமுக வலைத்தளங்களில் வெளியானதை அடுத்து கல்வி அமைச்சின் இந்த உத்தரவு வந்துள்ளது.
Many schools have limited facilities but not having a complete roof is unacceptable! We need to re evaluate our priorities as a nation & ensure a better future for our children. We need not only educational but political & social reform! pic.twitter.com/qDLYXsUXUS
— Namal Rajapaksa (@RajapaksaNamal) June 1, 2022
That’s our future fighting hard to keep hopes alive. We don’t invest enough in education as a country.
— Sajith Premadasa (@sajithpremadasa) June 1, 2022
We will through SJB Sakwala program include infrastructure needs of schools. pic.twitter.com/5MuNrgL6ZM
