கிழக்கில் காணாமல் போன இரு மாணவர்களும் சடலங்களாக மீட்பு
புதிய இணைப்பு
அம்பாறையில் கடலில் மூழ்கி காணாமல் போன பாடசாலை மாணவர்கள் இருவரும் இன்று (17) முற்பகல் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
மாளிகைக்காடு - சாய்ந்தமருதைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் 8 பேர் நிந்தவூர் பிரதேச கடலில் நேற்றுப் பிற்பகல் படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது அதில் இருவர் கடலில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போயிருந்தனர்.அவர்களின் சடலங்களே இன்று மீட்கப்பட்டுள்ளன.
மாளிகைக்காடு பிரதேசத்தைச் சேர்ந்த சூர்தீன் முஹம்மட் முன்சிப் (வயது 15), சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த முஹம்மட் இல்ஹம் (வயது 15) ஆகிய மாணவர்களே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
முதலாம் இணைப்பு
அம்பாறை மாவட்ட ஒலுவில் நிந்தவூர் எல்லைக் கடலோரத்தில் இழுத்து செல்லப்பட்ட இரு மாணவர்களில் ஒருவரின் உடல் ஒழுவில் பகுதியில் கரையொதுகியுள்ளது.
இதனடிப்படையில், சூர்தின் முஹம்மட் முன்சிப் என்ற மாணவனின் சடலமே இன்று(17) காலை கரையொதுங்கியுள்ளது.
மற்றைய மாணவனின் உடல் தேடப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அலையில் இழுத்து செல்லப்பட்டு
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், நேற்றைய தினம் அம்பாறை மாவட்டம் நிந்தவூர் காவல்துறை பிரிவிற்குட்பட்ட ஓலுவில் நிந்தவூர் எல்லைக் கடலோரங்களில் விளையாட்டில் ஈடுபட்டிருந்த எட்டு மாணவர்களில் இருவர் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர்.
அதாவது, 13-15 வயதுக்குட்பட்ட எட்டு பாடசாலை மாணவர்கள் தொழுகையை முடித்துக்கொண்டு துவிச்சக்கர வண்டியில் நிந்தவூர் - ஒலுவில் எல்லை கடற்கரைக்கு சென்று புகைப்படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்த போது இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
தேடுதல் நடவடிக்கை
குறித்த சந்தர்ப்பத்தில், மாளிகைக்காடு - சாய்ந்தமருது பகுதியை சேர்ந்த இரண்டு மாணவர்கள் பிரதேச கடலில் புகைப்படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதனை தவிர்த்து ஏனைய ஆறு மாணவர்களிடம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |