சிறிலங்கா கிரிக்கெட் சபை விசாரணை: புதிய சர்ச்சையில் சிக்கிய கோப் குழு தலைவர்

Parliament of Sri Lanka Sri Lanka Cricket Sri Lanka Board of Control for Cricket in India
By pavan Nov 16, 2023 07:57 AM GMT
Report

இலங்கையின் கிரிக்கெட் சபை மீதான விசாரணை குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டார தற்போது புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

பொது நிறுவனங்களுக்கான விசாரணை குழுவின் (கோப்) சில உறுப்பினர்களும் அதன் தலைவர் ரஞ்சித் பண்டாரவும் சிறிலங்கா கிரிக்கெட் மீதான விசாரணையை தவறாக கையாண்டதாக ஒருவரையொருவர் குற்றம் சாட்டுவதால் இலங்கையின் கிரிக்கெட் தற்போது பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.

இலங்கையின் கிரிக்கெட் சபை மீதான விசாரணை முடியும் வரை பேராசிரியர் பண்டார குழுவின் தலைவர் பதவியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட வேண்டும் என சில கோப் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இடைநிறுத்தப்பட்ட உலக கிண்ண அரையிறுதி போட்டி மீண்டும் ஆரம்பம்

இடைநிறுத்தப்பட்ட உலக கிண்ண அரையிறுதி போட்டி மீண்டும் ஆரம்பம்

செவ்வாய்க்கிழமை கூட்டம்

இந்நிலையில் “கோப் தலைவர், கை சமிக்ஞைகளைப் பயன்படுத்தி, கடந்த செவ்வாய்க் கிழமை கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டாம் என்று கிரிக்கெட் நிறுவன உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த விடயம் தற்போது சமூக ஊடகங்களில் சர்ச்சையாக பேசப்பட்டு வருகிறது.

அதேவேளை, சமூக ஊடகங்களில் பரப்பப்படும் காணொளிகளில் இது தெளிவாகத் தெரியும்” என்று சஜித் பிரேமதாச குற்றச்சாட்டொன்றை நாடாளுமன்றில் முன்வைத்தார்.

சிறிலங்கா கிரிக்கெட் சபை விசாரணை: புதிய சர்ச்சையில் சிக்கிய கோப் குழு தலைவர் | Inquiry Into The Cricket Board Sri Lanka

எதிர்வரும் நாட்களில் கிரிக்கெட் நிறுவனம் தொடர்பில் கோப் குழு மேற்கொள்ளவிருக்கும் எதிர்கால விசாரணைகளுக்கு பேராசிரியர் பண்டார தலைமை தாங்க அனுமதிக்கக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே கோரிக்கை ஒன்றையும் முன்வைத்துள்ளார்.

"நவம்பர் 24, 27 மற்றும் 28 ஆகிய திகதிகளில் கோப் குழு கிரிக்கெட் நிறுவனத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. பேராசிரியர் பண்டாரவை தற்காலிகமாக நீக்கிவிட்டு, வேறொரு தலைவர் ஒருவரை நியமிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்," என்று அவர் கூறியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் விவகாரம்! விசாரணைக் குழுவிற்குள் நுழைந்த வெளி நபர்

இலங்கை கிரிக்கெட் விவகாரம்! விசாரணைக் குழுவிற்குள் நுழைந்த வெளி நபர்

தற்காலிகமாக வெளியேற்றம்

மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், பேராசியர் பண்டாரவை தலைமை தாங்கும் கிரிக்கெட் நிறுவனம் தொடர்பான எந்தவொரு விசாரணையிலும் தானும் கோப் குழுவின் சில உறுப்பினர்களும் பங்கேற்க விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா கிரிக்கெட் சபை விசாரணை: புதிய சர்ச்சையில் சிக்கிய கோப் குழு தலைவர் | Inquiry Into The Cricket Board Sri Lanka

இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் தொல்லவத்தவும் கோப் தலைவரை தற்காலிகமாக வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதற்கு பதிலளித்த பேராசிரியர் பண்டார, விசாரணையை அரசியலாக்க எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ்க் கட்சிகளிடம் ஒற்றுமை இல்லை என்று கூறி நழுவிச் செல்லும் இந்தியா

தமிழ்க் கட்சிகளிடம் ஒற்றுமை இல்லை என்று கூறி நழுவிச் செல்லும் இந்தியா

காரணம்

“கோப் முடிந்தவரை சுதந்திரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும், கிரிக்கெட் சபை மீதான விசாரணையை அரசியலாக்க எதிர்க்கட்சி உறுப்பினர்களால் திட்டமிட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

நான் என் உதடுகளில் விரல்களை வைத்து, பல உறுப்பினர்கள் ஒரே நேரத்தில் பேசுவதால், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை அமைதியாக இருக்கும்படி கேட்டுக் கொண்டேன்," என்று அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.

சிறிலங்கா கிரிக்கெட் சபை விசாரணை: புதிய சர்ச்சையில் சிக்கிய கோப் குழு தலைவர் | Inquiry Into The Cricket Board Sri Lanka

இவ்வாறான ஒரு சூழ்நிலையில் இலங்கை கிரிக்கெட் மீதான விசாரணைகளில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளதோடு, சரியான தீர்வு நிலை குறித்து விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் கேள்விகளும் எழுந்துள்ளது.

ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், உக்குளாங்குளம்

17 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், செட்டிகுளம் வவுனியா

19 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada

18 Dec, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி, கம்பஹா வத்தளை

14 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025