தியாக தீபத்தின் சிலை அகற்றம்: நடவடிக்கைக்கு தயாராகிறது சட்டமா அதிபர் திணைக்களம்
தியாக தீபம் திலீபனின் சிலை அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனால் நிலையியல் கட்டளையின் பிரகாரம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் வழங்கிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
காவல்துறை விசாரணை
''திலீபனின் சிலை வைப்பு விவகாரம் தொடர்பில் காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

ராசையா பார்த்தீபன் என்ற திலீபன் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர் என்ற விடயம் தெரியவந்துள்ளது.
Faibar கொண்டு ஆக்கப்பட்ட திலீபனின் சிலை காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இது குறித்து 14 பேரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மேலும் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்" என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |