தரமற்ற மருந்து இறக்குமதி : சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளருக்கு விசாரணை
இலங்கையில் தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசியை கொள்வனவு செய்து மருத்துவமனைகளுக்கு விநியோகித்தமை தொடர்பில், சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை, அவரது அலுவலகத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனக ஸ்ரீ சந்திரகுப்த கைது
சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த அண்மையில் விசாரணையின் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், நாட்டில் சுமார் 2 ஆயிரம் நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி தொடர்பாக ஜனக ஸ்ரீ சந்திரகுப்த உட்பட 6 பேர் இதுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
130 மில்லியன் பண மோசடி
இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்கள் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை போலி ஆவணங்களின் ஊடாக குறித்த மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டதாகவும் இந்த நடவடிக்கையின் மூலம் 130 மில்லியன் ரூபாய் பண மோசடி செய்யப்பட்டதாகவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |