வீட்டுக்கு செல்கிறார் காவல்துறை மா அதிபர் -அடுத்தவர் யார்..!
Sri Lanka Police
Ranil Wickremesinghe
Tiran Alles
By Sumithiran
மூன்று மாத கால சேவை நீடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், காவல்துறை மா அதிபர் சி.டி.விக்ரமசிங்கவின் சேவைக் காலம் எதிர்வரும் 26ஆம் திகதி நிறைவடையவுள்ளது.
மார்ச் 26-ம் திகதி ஓய்வு பெற இருந்த அவருக்கு அரசு மூன்று மாத கால சேவை நீடிப்பு வழங்கியது.
ரணில் நாடு திரும்பியதும்
தற்போது அடுத்த காவல்துறை மா அதிபர் பதவிக்கு தேஷ்பந்து தென்னகோன், நிலந்த ஜயவர்தன, லலித் பதிநாயக்க, அஜித் ரோஹன, பிரியந்த வீரசூரிய ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ள நிலையில், அடுத்தவர் யார் என்பது தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை.
அதிபர் ரணில் தனது வெளிநாட்டு விஜயங்களை முடித்துக்கொண்டு இலங்கை திரும்பியதும் இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தெரிவித்துள்ளார்.
