புத்தாண்டை முன்னிட்டு விசேட தொடருந்து சேவைகள் ஆரம்பம்
Sinhala and Tamil New Year
Colombo
Galle
By Laksi
எதிர்வரும் தமிழ், சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் மற்றும் மீண்டும் வரும் பயணிகளுக்காக விசேட தொடருந்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அதன்படி, வெளி மாகாணங்களுக்கான சிறப்பு தொடருந்து சேவைகள் இடம்பெறும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
விசேட தொடருந்து சேவைகள்
இதற்கமைய, எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை விசேட தொடருந்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து காலி, பெலியத்த, கண்டி, மாத்தறை, ஹட்டன் மற்றும் பதுளை ஆகிய பகுதிகளுக்கு விசேட தொடருந்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 6 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்