உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்று இனி நடக்காது : பாதுகாப்பு செயலர் உறுதி
பாதுகாப்பு செயலாளர் என்ற வகையில் நாட்டு மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன். 24 மணி நேரமும் பொது பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பை நாங்கள் கண்காணித்து வருகிறோம். ஈஸ்டர் ஞாயிறு போன்ற ஒரு சம்பவத்தை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.
இவ்வாறு பாதுகாப்பு செயலர் ஜெனரல் கமல் குணரத்ன(kamal gunaratne) தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஐ.எஸ் பயங்கரவாதிகளின் செயற்பாடுகள்
ஐ.எஸ் பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் தொடர்பில் இலங்கையின் புலனாய்வு அமைப்புகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தியா சென்றவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம். அவர்களுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நால்வரும் போதைக்கு அடிமையானவர்கள்
தற்போது கைது செய்யப்பட்ட நால்வரும் போதைக்கு அடிமையானவர்கள். கண்டிப்பாக அவர்களிடம் மத நம்பிக்கை இல்லை.
இந்தியாவில் இருந்து எமக்கு வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எமது புலனாய்வு அமைப்புகளும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் மாலை திருவிழா
