அநுர ஆட்சியில் அமெரிக்க கையகப்படுத்தும் இரகசிய அறிக்கை!
இலங்கையில் தற்போதைய மற்றும் எதிர்கால அரசியல் பிரச்சினைகள் குறித்து அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் வாரந்தோறும் தூதரகத்திற்குத் தெரிவித்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி இளைஞர் கழகங்களின் தற்போதைய நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க தூதரகம் உன்னிப்பாக ஆராய்ந்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.
எதிர்க்கட்சி இளைஞர்களுக்குப் பதிலாக தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு விசுவாசமானவர்கள் இளைஞர் கழகங்களில் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர் என்ற சமூக எதிர்ப்புக்கு தூதரகம் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இளைஞர் சமூகம் தொடர்பான நெருக்கடி
அதன்படி, இளைஞர் சமூகம் தொடர்பான நெருக்கடி கடந்த வாரத்தில் தூதரகத்திடமிருந்து சிறப்பு கவனத்தைப் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இளைஞர் கழகங்களை நிறுவுதல், உறுப்பினர் பட்டியல்களைத் தயாரித்தல், பதவிகளுக்கான நியமனங்கள் மற்றும் இளைஞர் விவகார அமைச்சகம் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் நடத்தை உள்ளிட்ட பல விடயங்கள் அமெரிக்க தூதரகத்தால் கண்காணிக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.
இதற்கிடையில், இளைஞர் பிரதிநிதிகள் குழு ஒன்று கடந்த வாரம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இளைஞர் கழகங்களில் அரசியல் உள்நுளைக்கப்பட்டுள்ளதாக இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்க
மேலும், தேசிய மக்கள் சக்திக்கு விசுவாசமானவர்களின் பெயர்ப் பட்டியலைத் தயாரித்து இளைஞர் கழகங்களில் நியமிக்கும் சதி நடப்பதாக இளைஞர்கள் குழு முன்னாள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளதாக சில தென்னிலங்கை ஊடகங்கள் விளக்கமளித்துள்ளன.
1977 அரசாங்கத்தில் இளைஞர் விவகார அமைச்சராக இருந்தபோது, அரசியலைப் பொருட்படுத்தாமல், கிராம மட்டத்தில் இளைஞர் மாநாடுகளை நடத்தவும், இளைஞர் சங்கங்களைக் கட்டமைக்கவும் நடவடிக்கை எடுத்ததாக ரணில் இங்கு விளக்கியதாகவும் கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் மாலை திருவிழா
