இந்த வருடத்திற்குள் வங்கி வட்டி வீதங்கள் குறைக்கப்படும் - சாகல ரத்நாயக்க
Central Bank of Sri Lanka
Sri Lanka
Sagala Ratnayaka
By Sathangani
சிறிலங்காவில் இந்த ஆண்டின் இறுதிக்குள் வங்கி வட்டி வீதங்களை ஒற்றை இலக்கத்திற்கு கொண்டு வர முடியும் என அதிபரின் பணிக்குழாம் மட்ட பிரதானி சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதனால் சிறு மற்றும் நடுத்தர உரிமையாளர்கள் மீண்டும் வலுப்பெறுவார்கள் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார நெருக்கடியின் போது

ஐக்கிய தேசிய கட்சியின் சிறிகொத்த கட்சித் தலைமையகத்தில் நேற்று(13) இடம்பெற்ற அதிகார சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியின் போது, வங்கி வட்டி விகிதங்கள் 34 சதவீதமாக இருந்ததாகவும், ஆனால் இன்று அவை 16 முதல் 17 சதவீதமாக உள்ளதாகவும் சிறிலங்கா மத்திய வங்கி அறிவித்துள்ளதாக சாகல ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி