செம்மணி மனித பேரவலத்திற்கு நீதி கோரி அவுஸ்திரேலியாவில் எதிரொலித்த குரல்கள்

Jaffna Australia chemmani mass graves jaffna
By Raghav Jul 22, 2025 06:01 AM GMT
Report

செம்மணி மற்றும் ஏனைய மனித புதைகுழிகள் குறித்து சர்வதேச விசாரணை அவசியம் என வலியுருத்தி அவுஸ்திரேலியாவில்  (Australia) பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பேரணி, அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை தமிழர்களால் நேறறைய தினம் (21.07.2025) நடைபெற்றுள்ளது.

இதன்போது, செம்மணி மற்றும் ஏனைய மனித புதைகுழிகள் குறித்து முழுமையான சர்வதேச விசாரணை அவசியம் என இலங்கை தமிழர்கள் ஐநா மற்றும் வெளிநாடுகளின் தூதரகங்களிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர். 

மட்டக்களப்பு மாவட்ட வைத்திய உபகரணங்கள் களுத்துறைக்கு! சபையில் அம்பலம்

மட்டக்களப்பு மாவட்ட வைத்திய உபகரணங்கள் களுத்துறைக்கு! சபையில் அம்பலம்

செம்மணிமனித புதைகுழி

இலங்கை அரசாங்கத்தினால் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளமை செம்மணிமனித புதைகுழிகள் மூலம் மீண்டும் தெரியவந்துள்ளதை தொடர்ந்து நேற்று குறித்த பேரணி முன்னெடுக்கப்பட்டது.

செம்மணி மனித பேரவலத்திற்கு நீதி கோரி அவுஸ்திரேலியாவில் எதிரொலித்த குரல்கள் | International Awareness Rally In Australia

இந்த மனித புதைகுழிகள் தனியானதொரு சம்பவம் இல்லை,அமைதியான விதத்திலும் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்பட்ட நிலையிலும் தொடரும் இனப்படுகொலையின் ஒரு பகுதியே இந்த மனித புதைகுழிகள் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

ஐநா அலுவலகத்திடமும் உலக நாடுகளின் தூதரங்களிடமும் தமிழர்கள் சர்வதேச சமூகத்தின் உறுதியான நடவடிக்கை மற்றும் நீதியை கோரும் மனு ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.

இப்பேரணியில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் பின்வருமாறு,

01. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட செம்மணி உட்பட்ட பல மனித புதைகுழிகள் பற்றிய முழுமையானச் சர்வதேச நீதி விசாரணை நடைபெறவேண்டும். 

02. எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐநா மனிதவுரிமைகள் பேரவையில் சிறிலங்கா மீது வலுவான தீர்மானத்தைக் கொண்டுவர அவுஸ்திரேலியா உட்பட அனைத்து நாடுகளும் தெளிவான நிலைப்பாட்டை எடுக்கவேண்டும்.

03. தமிழர்கள் மீது இனப்படுகொலைகள் புரிந்த படை அதிகாரிகள் மீதான பயணத்தடையை அமெரிக்கா, பிரித்தானியா, கனடா போல அனைத்து நாடுகளும் நடைமுறைப்படுத்தவேண்டும்.

செம்மணி மனித பேரவலத்திற்கு நீதி கோரி அவுஸ்திரேலியாவில் எதிரொலித்த குரல்கள் | International Awareness Rally In Australia

04. தமிழர் இனவழிப்பில் பாதிக்கப்பட்டவர்களையும் சாட்சியங்களையும் பாதுகாக்கும் வகையில் ஏதிலிகளுக்கான பாதுகாப்பை அனைத்து நாடுகளும் பொறுப்புணர்வுடன் வழங்கவேண்டும்.

05. சிறிலங்கா அரசு கையகப்படுத்தியுள்ள தமிழர்களின் பாரம்பரிய வாழ்விடங்களை விடுவிப்பதுடன் தமிழர் தாயகத்தைப் பல்வேறு வகையில் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை நிறுத்த சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

06. பயங்கரவாதத் தடைச் சட்டம் என்ற பெயரில் இன்றும் தொடர்ந்து வரும் தமிழன அடக்குமுறைகளை நிறுத்துவதற்கும் நீண்டகாலமாகச் சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்வதற்கும் சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுக்கவேண்டும்.

07. தமிழர்கள் மீது கடந்த 76 ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் இனவழிப்புச் செயற்பாட்டை நிறுத்தி ஓர் சர்வதேச நீதிப்பொறிமுறை ஊடாகத் தமிழர்களின் வாழ்வுரிமையை உறுதிசெய்ய அனைத்து நாடுகளும் ஆதரவளிக்க வேண்டும்.

இலங்கை சனத்தொகை - ஆண்களை முந்திய பெண்கள்

இலங்கை சனத்தொகை - ஆண்களை முந்திய பெண்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     




ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

19 Mar, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026