சிறிலங்காவிற்கு எதிரான பன்னாட்டு விசாரணை! ஐ.நா. அமர்வுக்கு முக்கிய கடிதம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் 60ஆவது அமர்வில் சிறிலங்கா அரசிற்கான பன்னாட்டு விசாரணையையும் நடவடிக்கையையும் மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் ஆணையாளருக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
இந்தக் கடிதமானது மதத்தலைவர்கள், முன்னாள் மற்றும் இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாண சபை முதலமைச்சர் மற்றும் உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், சட்டத்தரணிகள், வலிந்து காணாமலாக்கப்பட் டோர் சங்கத்தினர், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட 56 பேரின் கையொப்பத்துடன் ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
60ஆவது அமர்வு
அதன்படி, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 60ஆவது அமர்வு தனது தீர்மானத்தில் பின்வரும் நடவடிக்கைகளை சேர்க்குமாறு வலியுறுத்தி குறித்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இதன்படி கடிதத்தில்,
1.1948ஆம் ஆண்டு இனப்படுகொலைக் குற்றங்களைத் தடுக்கும் மற்றும் தண்டிக்கும் வரைபின் படி முழுக் காலஅளவு அதிகாரத்தை உள்ளடக்கிய பணி ஆணையுடன், பன்னாட்டுச் சுயாதீன மற்றும் பாரபட்சமற்ற பொறிமுறையொன்றை (IIIM) நிறுவுதல்.
2. பன்னாட்டுச் சட்டத்தின் கீழ் தங்களின் கடமைகளின் படி, உறுப்புநாடுகள் மற்றும்-அல்லது பார்வையாளர் நாடுகள் சிறிலங்காவிற்கு எதிராக நீதிக்கான பன்னாட்டு நீதிமன்றத்தில் (ICJ) வழக்குத் தொடங்குதல்.
3.செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் மீது சுயாதீன மேற்பார்வை மற்றும் கண்காணிப்பை உறுதி செய்ய போர்ன்மொத் நெறிமுறையை செயல்படுத்தக்கூடிய பன்னாட்டு நிபுணர் குழுவை அமைத்தல்.
4. பன்னாட்டு மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டப் பொறுப்புகளுக்கு முரணான தற்போதைய அல்லது எதிர்கால சட்ட நடவடிக்கைகளின் இயற்றுதலை இடைநிறுத்தி, தடைசெய்தல்” போன்ற விடயங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
