சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வது சிறைக்குச் செல்வதற்கு சமம்! வாசுதேவ காட்டம்
சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வது என்பது சிறைக்கு செல்வதற்கு சமமானது என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார (Vasudeva Nanayakkara) தெரிவித்துள்ளார்.
எனவே அரசாங்கம் நாசமாகிப் போனாலும் கூட ஒருபோதும் சர்வதேச நாணய நிதியத்திற்கு சென்று மக்களை நாசமாக்க இடமளிக்க விடமாட்டோம்என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வரவு - செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
சர்வதேச சந்தையில் விலை உயர்வு காணப்படுகின்ற நிலையிலும், ஏனைய பல சிக்கல்கள் உள்ள நிலையிலும் நாட்டில் விலைவாசி அதிகரிக்கும்.
இதற்கான தீர்வு எதிர்க்கட்சியிடம் உள்ளதா எனவும் அவர் இதன்போது கேள்வியெழுப்பியுள்ளார்.
கொரோனா தொற்று இல்லையெனில் வேறுவிதமாக இந்த வரவு செலவு - திட்டம் உருவாகியிருக்கும்.
மேலும் நாட்டில் தற்போது வறுமை, வேலையின்மை அதிகரித்துள்ள நிலையில் அவற்றை கருத்தில் கொண்டே இறுக்கமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.