வீண் பதற்றங்கள் வேண்டாம் : சர்வதேச கண்காணிப்பாளர்கள் வலியுறுத்து
கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு இலங்கை தேர்தல் ஆணைக்குழு சர்வதேச மட்ட ஆதரவை வழங்கும் என்றும் தேர்தல் நாட்களிலும் அதன் பின்னரும் இதுவரை நிலவிய அமைதியான சூழ்நிலை நிலவும் என நம்பிக்கை உள்ளதாகவும் தேர்தல் நாளிலும் அதற்குப் பிறகும் பீதியடைய வேண்டாம் எனவும் ரஷ்ய கூட்டமைப்பின் சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர் எவ்ஜெனி ஷெவ்சென்கோவ் (Evgeny Shevchenkov) இலங்கை வாக்காள பெருமக்களுக்கு தெரிவித்தார்.
கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இன்று (செப். 19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை தேர்தல் ஆணைக்குழுவிற்கு கோப்புகள் மற்றும் தொழில்நுட்ப ஆதரவை வழங்கிய ரஷ்ய(russia) கூட்டமைப்பின் சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர், சர்வதேச கண்காணிப்பு குழுவிற்கு ஏற்கனவே மிகச் சிறந்த ஆதரவை வழங்கியுள்ளார்.
அமைதியான முறையில் தேர்தலை அவதானிக்க தயார்
செப்டம்பர் 21-ம் திகதி எந்தக் கட்சிக்கும் செல்வாக்கு இல்லாமல் அமைதியான முறையில் தேர்தலை அவதானிக்க தயாராக உள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலை அவதானிப்பதற்காக இந்த செய்தியாளர் சந்திப்பில் பங்களாதேஷ்(bangladesh), நேபாளம்(nepal), ரஷ்யா(russia), பிலிப்பைன்ஸ்(philippines), பூட்டான்(Bhutan), மாலைதீவு(maldives) உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்த சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் கலந்துகொண்டனர்.ஜனாதிபதி தேர்தலைக் கண்காணிக்கும் நோக்கில் இந்த சர்வதேச தேர்தல் கண்காணிப்புக் குழு நேற்று (செப்டம்பர் 18) இலங்கை வந்தடைந்தது.
இதேவேளை, கொழும்பு, யாழ்ப்பாணம், காலி உள்ளிட்ட இலங்கையின் சகல பிரதேசங்களையும் உள்ளடக்கிய வகையில் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக மாலைதீவு பிரதிநிதியாக வருகை தந்த கண்காணிப்பாளர் ஃபுவாட் தௌபிக் (Fouad Taufiq) தெரிவித்தார்.
வாக்காளர் நன்கு தயாராக இருக்க வேண்டும்
ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கச் செல்லும் போது, வாக்காளர் நன்கு தயாராக இருக்க வேண்டும் என்றும், 38 வேட்பாளர்கள் போட்டியிடுவதால், அவர்கள் வாக்களிக்கும் வேட்பாளரின் அடையாளம் எந்த இடத்தில் உள்ளது என்பது குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.வாக்குச் சாவடிக்குச் செல்லும் முன் வாக்குச் சீட்டில் பார்வையிடுவது நேரத்தை மிச்சப்படுத்தும்.
ஒவ்வொரு அதிகாரியும் சட்டத்தின்படி பணிபுரிந்தால், வாக்காளர்கள் அமைதியாகச் செயல்பட்டால் வெற்றிகரமான தேர்தலை நடத்த முடியும் என்று மாலைதீவை பிரதிநிதித்துவப்படுத்தும் தேர்தல் பார்வையாளர் தெரிவித்தார்.
இந்த சர்வதேச பிரதிநிதிகளுக்கு மேலதிகமாக, ஐரோப்பிய ஒன்றியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 80 பார்வையாளர்களும், பொதுநலவாய நாடுகள் மற்றும் உள்ளுராட்சி தேர்தல் கண்காணிப்பாளர்கள் உட்பட சிவில் அமைப்புகளை சேர்ந்த இருவர் இந்த ஆண்டு தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் பங்கேற்க உள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |