அமெரிக்காவிலுள்ள வெளிநாட்டு மாணவர்களுக்கு ட்ரம்பின் அதிரடி உத்தரவு
அமெரிக்க (America) கல்லூரிகளில் படித்து வரும் வெளிநாட்டு மாணவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) உத்தரவொன்றை பிறப்பித்துள்ளார்.
இதன்படி, அமெரிக்க கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராகவோ அரசுக்கு எதிராகவோ போராட்டம் செய்தால் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர், “அமெரிக்காவில் உள்ள எந்த ஒரு கல்லூரி அல்லது கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் சட்டத்துக்கு விரோதமான போராட்டங்களில் ஈடுபடக்கூடாது.
கல்லூரி நிர்வாகம்
கல்லூரி நிர்வாகம் இது போன்ற போராட்டங்களை அனுமதிக்கவும் கூடாது. அவ்வாறு போராட்டங்களை அனுமதித்தால், அந்த கல்வி நிறுவனங்களுக்கு அரசிடம் இருந்து செல்லும் நிதியுதவி நிறுத்தப்படும்.
போராட்டத்தில் ஈடுபடும் வெளிநாட்டு மாணவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் அல்லது அவர்களின் சொந்த நாட்டுக்கு நிரந்தரமாக திருப்பி அனுப்பப்படுவார்கள்.
அமெரிக்காவைச் சேர்ந்த மாணவர்கள் போராடினால், அவர்கள் நிரந்தரமாக கல்வி நிறுவனத்தில் இருந்து நீக்கப்படுவார்கள், குற்றத்தின் தன்மைக்கேற்ப அவர்கள் கைது செய்யப்படுவார்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
