கனடா - அமெரிக்காவில் வேலை தேடும் சர்வதேச மாணவர்களுக்கு வெளியான தகவல்
கனடா (Canada), அமெரிக்கா (United States) மற்றும் பிரித்தானியாவில் (United Kingdom) சர்வதேச மாணவர்களுக்கு வேலை வாய்ப்புக்கள் குறைவு என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தொழிலதிபர் ஒருவர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனடிப்படையில், கோடிக்கணக்கில் பணம் செலவு இந்த நாடுகளுக்கு கல்வி கற்க வரும் முன் யோசித்து முடிவெடுக்குமாறு அவர் வலியுருத்தியுள்ளார்.
கோடிக்கணக்கில் செலவு
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், “அமெரிக்கா, கனடா மற்றும் பிரித்தானியாவில் சர்வதேச மாணவர்களுக்கு வேலை இல்லை.
தேனிலவு காலகட்டம் முடிவடைந்து விட்டது, கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கல்வி கற்க அனுப்புவதற்கு முன் பெற்றோர் முன் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து முடிவெடுக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச மாணவர்கள்
மேற்படி நாடுகள், சர்வதேச மாணவர்கள் கல்வி கற்றபின் அந்நாடுகளில் தங்கி வேலை செய்வதை கடினமாக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
இவ்வாறான சூழலில் தொழிலாதிபர் மேற்படி எச்சரிக்கையை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
