எதிர்வரும் 14 , 15 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள சர்வதேச நீர் மாநாடு

Sri Lanka Jeevan Thondaman Water
By Sathangani Dec 07, 2023 04:42 AM GMT
Sathangani

Sathangani

in சமூகம்
Report

2023 ஆம் ஆண்டுக்கான சர்வதேச நீர் மாநாடு எதிர்வரும் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாகவும்,  'CEWAS' என்ற எமது அமைச்சுக்குரிய நீர் மற்றும் சுகாதாரத்திற்கான மேம்பாட்டு மையத்தில் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (06) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்

”நீர்சார் துறைகளில் நிலவும் பிரச்சினைகள், புதுப்பிக்கத்தக்க சக்தியை நீர்வளத்துறைக்கு எவ்வாறு பயன்படுத்துவது, நீர்வழங்கலின்போது நவீன தொழில்நுட்ப பயன்பாடு, தற்போதைய சூழ்நிலைக்கேற்ப எவ்வாறு கொள்கைகளை மாற்றியமைத்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் மாநாட்டில் கவனம் செலுத்தப்படவுள்ளது.

தனி ஈழ இராச்சியத்துக்கு இடமளிக்கமாட்டேன்: நாடாளுமன்றில் இனவாதத்தை கக்கிய சரத் வீரசேகர (காணொளி)

தனி ஈழ இராச்சியத்துக்கு இடமளிக்கமாட்டேன்: நாடாளுமன்றில் இனவாதத்தை கக்கிய சரத் வீரசேகர (காணொளி)


சுத்தமான குடீநீர் 

மழைநீர் மூலம் பாதுகாப்பான குடிநீரை பெறுவதற்கான பொறிமுறை பற்றியும் ஆராயப்படும். மாநாட்டில் பங்கேற்கும் துறைசார் நிபுணர்கள் மற்றும் புத்திஜீவிகளிடம் இது சம்பந்தமாக ஆலோசனைகள், கருத்துக்கள் பெறப்படும்.

எதிர்வரும் 14 , 15 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள சர்வதேச நீர் மாநாடு | International Water Conference Held On 14Th 15Th

மக்களுக்கு சுத்தமான - சுகாதார பாதுகாப்புடைய குடிநீரை வழங்குவதே எமது பிரதான நோக்கம். இந்த இலக்கை நோக்கிய பயணத்தை துரிதப்படுத்துவது சம்பந்தமாகவும் கலந்துரையாடல்கள் இடம்பெறும்.

நீர் வீண்விரயத்தை தடுப்பதற்கான - கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் சம்பந்தமான வழிகாட்டல்களும் முன்வைக்கப்படும். தேசிய நீர்வழங்கல் அதிகாரசபையால் எமது நாட்டில் 48 சதவீதமானோருக்கு குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.

ரஷ்ய தாக்குதலில் உக்ரைன் இராணுவத்தில் பணியாற்றிய மூன்று இலங்கையர்கள் பலி

ரஷ்ய தாக்குதலில் உக்ரைன் இராணுவத்தில் பணியாற்றிய மூன்று இலங்கையர்கள் பலி


கொரோனா நெருக்கடிக்கு பின்னர்

அனைவருக்கும் சுத்தமான குடிநீரை வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. கொரோனா நெருக்கடிக்கு பின்னரான பொருளாதார சூழ்நிலை மற்றும் சவால்களுக்கு மத்தியிலும் இலக்கை நோக்கிய பயணத்தில் நாம் உறுதியாக உள்ளோம்.

எதிர்வரும் 14 , 15 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள சர்வதேச நீர் மாநாடு | International Water Conference Held On 14Th 15Th

ஐ.நாவின் நிலைபேறான மற்றும் நிலையான வளர்ச்சியை நோக்கிய பயணத்தில் சுத்தமான குடிநீர் என்ற இலக்கும் உள்ளது. அந்த திட்டத்துக்கு 6 ஆவது இடம் வழங்கப்பட்டுள்ளது. அந்த இலக்கை அடைவதற்கு நடவடிக்கை முன்னெடுத்து வருகின்றோம்.

இந்த இரு நாட்கள் மாநாட்டில் பிரதம அதிதியாக பிரதமர் பங்கேற்பார். உலக வங்கியின் பிரதானி சரோஜ் குமார் ஜா கலந்துகொள்கின்றார். உலக வங்கி மூலமாக நீர்வழங்கல் துறைக்கு நிறைய உதவிகளை செய்துள்ளார்.

இதன்போது நுவரெலியா மற்றும் ஊவா மாகாணத்துக்கும் அவர் செல்வார். நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அதிகார சபையிலும் மறுசீரமைப்புகள் இடம்பெறும். நீர்வழங்கல் துறைமூலம் நாட்டின் பொருளாதாரத்துக்கும் பங்களிப்பு வழங்கப்படும்." - எனத் தெரிவித்தார்.

சட்டக்கல்லூரி தொடர்பில் அதிபர் ரணில் விடுத்துள்ள பணிப்புரை

சட்டக்கல்லூரி தொடர்பில் அதிபர் ரணில் விடுத்துள்ள பணிப்புரை


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 3ஆம் நாள் மாலை - திருவிழா

ReeCha
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Meschede, Germany

23 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
மரண அறிவித்தல்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காரைநகர்

27 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், வவுனியா, Scarborough, Canada

01 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
அகாலமரணம்

நெடுந்தீவு கிழக்கு, திருச்சி, India, Toronto, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

சிலாபம், Viby, Denmark

25 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டகப்புலம், London, United Kingdom

28 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017