முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு சர்வதேச பிடியாணை : வெளியான தகவல்

Basil Rajapaksa Law and Order Ananda Wijepala
By Sathangani Sep 19, 2026 08:07 AM GMT
Report

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக இன்டர்போல் நீல நிற அறிவிப்பை (Blue notice) வெளியிட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் உள்ள 1.5 ஏக்கர் காணியை 60 மில்லியன் ரூபாய்க்கு கொள்வனவு செய்தமை தொடர்பான வழக்கில் பல சந்தர்ப்பங்களில் நீதிமன்றில் முன்னிலையாகத் தவறியதால், பசில் ராஜபக்சவை கைது செய்வதற்காக இவ்வாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கோரிக்கைக்கு அமைய அவருக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஊடகமொன்றுக்கு குறிப்பிட்டுள்ளார்.

ஆரம்பத்தில் NPPக்கு ஆதரவாக செயற்பட்ட அர்ச்சுனா எம்.பி : விமல் வீரவன்ச பகிரங்கம்

ஆரம்பத்தில் NPPக்கு ஆதரவாக செயற்பட்ட அர்ச்சுனா எம்.பி : விமல் வீரவன்ச பகிரங்கம்

சட்ட மற்றும் சர்வதேச நடவடிக்கைகள்

இலங்கையில் நடைபெற்று வரும் சட்ட நடவடிக்கைகளுடன் தொடர்புடைய நபர்களைக் கண்டறிந்து மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கான முயற்சிகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், இலங்கையில் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டுள்ள அதேவேளை வெளிநாடுகளில் வசிக்கும் முன்னாள் அரசியல்வாதிகள் மற்றும் தேடப்படும் பிற நபர்களைக் கண்டறிய அரசாங்கம் சர்வதேச சட்ட நடைமுறைப்படுத்தல் வழிமுறைகளைப் பயன்படுத்தி வருகின்றதாக கூறினார்.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு சர்வதேச பிடியாணை : வெளியான தகவல் | Interpol Notice Issued For Ex Min Basil Rajapaksa

பசில் ராஜபக்ச தொடர்பான குற்றவியல் விசாரணைகளின் ஒரு பகுதியாக அவரது அடையாளம், இருப்பிடம் அல்லது நடவடிக்கைகள் குறித்த தகவல்களை சர்வதேச சட்ட நடைமுறைப்படுத்தல் அதிகாரிகள் பெற்றுக்கொள்வதை சாத்தியமாக்கும் வகையில் அவருக்கு எதிராக 'நீல நிற அறிவிப்பு' ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

பசில் ராஜபக்சவுக்கு எதிராக நீல நிற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் விசாரணைக்கு நபர்கள் தேவைப்படும்போது, ​​'நீல நிற அறிவிப்பு' மூலம் இன்டர்போலுக்கு அறிவிக்கிறோம். அவர் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வசிப்பதற்கான முகவரி தெரிந்திருந்தால், அந்த நாட்டிற்கு அவர் தேவைப்படுகிறார் என்பதை 'நீல நிற அறிவிப்பு' உணர்த்துகிறது என்று அமைச்சர் கூறினார்.

குற்றவியல் மற்றும் இலஞ்சம் தொடர்பான வழக்குகளில் தேடப்படும் நபர்கள், அவர்கள் முன்பு வகித்த அரசியல் பதவிகள் எதுவாக இருந்தாலும், அவர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வரத் தேவையான சட்ட மற்றும் சர்வதேச நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

சவுதியில் இலங்கை இளைஞருக்கு மரண தண்டனை : சவுதி மன்னரிடம் அவசர வேண்டுகோள்

சவுதியில் இலங்கை இளைஞருக்கு மரண தண்டனை : சவுதி மன்னரிடம் அவசர வேண்டுகோள்

மகிந்தவின் மேடையில் தனக்கு பிடித்த மிருகம் புலி என்றாராம்: அப்படியென்றால் அர்ச்சுனா சொன்னது...

மகிந்தவின் மேடையில் தனக்கு பிடித்த மிருகம் புலி என்றாராம்: அப்படியென்றால் அர்ச்சுனா சொன்னது...

 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்