திருகோணேச்சரத்தில் திருட்டு போன தாலி : முடிவிலியாய் தொடரும் சர்ச்சை
அண்மைய நாட்களாக திருக்கோணேஸ்வர ஆலயத்தில் தாலி திருட்டு போன சம்பவம் குறித்து பலதரப்பட்ட சர்ச்சைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், தாலி திருட்டு போனமை குறித்து கடந்த 11 ஆம் திகதி செந்தில் தொண்டமானால் (Senthil Thondaman) யாப்புக்கு முரணான திருக்கோணேஸ்வரம் ஆலய அபிவிருத்தி சம்பந்தமான பொது சபை உறுப்பினர்களுக்கான கூட்டம் ஒன்று அவசர அவசரமாக நடத்தப்பட்டது.
குறித்த கூட்டத்தில் செந்தில் தொண்டாமான் பல கருத்துக்களை முன்வைக்க இது குறித்து மக்களுக்கும் ஆளுநருக்கும் இடையில் வாக்குவாதங்களும் இடம்பெற்றுள்ளது.
இடம்பெற்ற சர்ச்சை
அத்தோடு, கூட்டத்துக்கு வருகை தந்த திருகோணமலை (Trincomalee) சேர்ந்த ஆயுள் கால உறுப்பினர்கள் தமது கேள்விக்கு நீங்கள் பதில் கூறியே ஆக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்த காரணத்தால் பல கேள்விகளை ஆளுநரிடத்தில் முன்வைத்திருந்தனர்.
இருப்பினும், குறித்த கேள்விகளுக்கு பதில் வழங்காத செந்தில் தொண்டமான் அந்த இடத்தை விட்டு வெளியேறியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், இந்த கூட்டத்தில் இடம்பெற்ற சர்ச்சை குறித்து கூட்டத்தில் கலந்துகொண்ட செயற்பாட்டாளர் ரஜீவிடம் அண்மையில் நேர்காணலொன்று நடத்தப்பட்டிருந்தது.
தொடர் கருத்துக்கள்
குறித்த நேர்காணலில் நகை காணாமலாக்கப்பட்ட விடயத்தை வைத்து செந்தில் தொண்டமான் போசகர் பதவியை பெறமுயல்வதாகவும், ஆளுநர் நினைத்தால் எதை வேண்டுமானாலும் செய்யமுடியும் என்ற நினைப்பில் செந்தில் தொண்டமான் செயற்படுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இவ்வாறு குறித்த சம்பவம் தொடர்பாக பலதரப்பட்ட சர்ச்சையான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் இதற்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக செந்தில் தொண்டமானிடம் நடத்தப்பட்ட சிறப்பு நேர்காணல்ட பின்வருமாறு,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |