அர்ச்சுனாவின் எம்.பி பதவிக்கு எதிரான மனு : நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை
Parliament of Sri Lanka
Ramanathan Archchuna
High Court of Sri Lanka
By Independent Writer
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பில் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த மனுவை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்புமாறு அவரது சட்டத்தரணி இன்று (31) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனு இன்று (31) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவிப்பு
இதன்போது அர்ச்சுனா சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சேனானி தயாரத்ன மனுவை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்புமாறு கோரிக்கை முன்வைத்தார்.

எவ்வாறாயினும், இக்கோரிக்கை தொடர்பில் பொருத்தமான சந்தர்ப்பத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
you may like this
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டத்தை ஒடுக்குகிறதா அரசு? 22 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்