முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல கைது
புதிய இணைப்பு
வாகன விபத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அவர் மதுபோதையில் இருக்கவில்லை எனவும் விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
முதலாம் இணைப்பு
முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல பயணித்த ஜீப் வண்டி சபுகஸ்கந்த பகுதியில் மோட்டார் வாகனம் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியதில் ஏற்பட்ட விபத்து தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று (11.12.2025) இரவு 7.45 மணியளவில் சபுகஸ்கந்த, தெனிமல்ல பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
தற்போது வரை நான்கு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவி காவல்துறை அத்தியட்சகர் F.U. வுட்லர் தெரிவித்தார்.

விபத்தில் தொடர்புடைய ஜீப், மோட்டார் வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இவ்வாறு விபத்துக்குள்ளான தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |