வெஹெரகல நீர்த்தேக்கத்திலிருந்து மீட்க்கப்பட்ட பெருந்தொகை ஆயுதங்கள்: தொடரும் ஆய்வுகள்
கோனகங்ஆர வெஹெரகல நீர்தேக்கத்தில் மூழ்கியிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட பெருந்தொகை ஆயுதங்கள், சில மாதங்களுக்கு முன்னர் எவரேனும் ஒரு குழுவினரால் குறித்த நீர்தேக்கத்திற்கு கொண்டு வந்து விடப்பட்டிருக்கலாம் என காவல்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது.
இந்த ஆயுதங்கள் சாக்குகள் மற்றும் பெட்டிகளில் பொதி செய்யப்பட்டு நீரில் மூழ்கடிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதன்படி, கதிர்காமம், வெஹெரகல நீர்த்தேக்கத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்களில் 214 T56 ரக மெகசின்கள், 38 LMG ரக ட்ரம்ஸ் மெகசின்கள், 11 MPMG ட்ரம்ஸ் (200) மெகசின்கள், 09 MPMG ட்ரம்ஸ் (100) மெகசின்கள், 06 T-81 ரக மெகசின்கள், ஒரு 127100 ட்ரம்ஸ் மெகசின்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடரும் ஆய்வுகள்
இந்நிலையில், குறித்த நீர்தேக்கத்தில் மேலும் ஆயுதங்கள் ஏதேனும் உள்ளனவா என்பதைக் கண்டறிய காவல்துறையினர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கதிர்காமத்தில் உள்ள வெஹெரகல நீர்த்தேக்கத்திலிருந்து நேற்று பல ஆயுதங்கள் மீட்கப்பட்டன.
இராணுவத்தினருக்கு கிடைத்த புலனாய்வு தகவலின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதையடுத்து இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த நீர்த்தேக்கத்தின் மதகு அருகில் இன்னும் நீர் காணப்படுவதால், கடற்படை சுழியோடிகளின் உதவியுடன் அந்த பகுதி ஆய்வு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
