சிறிலங்காவில் புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகளுக்கு ஆபத்தா..!
சிறிலங்காவில் முதலீடுகளை செய்யவிரும்பும் புலம்பெயர் தமிழர்கள் தொடர்மாடி வீட்டுத்திட்டங்களில் முதலீடுகளை செய்வதை விட மாற்றுவழிகளை சிந்திக்கவேண்டும் என கொழும்பு பல்கலைகழகத்தின் பொருளியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அவர் வழங்கிய சிறப்பு நேர்காணலில் இவ்வாறு தெரிவித்திருந்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ அரசாங்கம் பல்வேறு பூச்சாண்டிகளைக் காட்டி புலம்பெயர் தமிழர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யக்கூடிய ஒரு நிலைமையும் இருக்கிறது.
முதலீட்டிற்கான பாதுகாப்பு
ஆனால், புலம்பெயர் தமிழர்கள் சிறிலங்காவில் மேற்கொண்டுள்ள முதலீட்டிற்கான பாதுகாப்பை உத்தரவாதமாக எழுதி வாங்கிக் கொள்ள முடியும்.
இஸ்லாமிய சமூகம் இந்த வழிமுறையினை நீண்ட காலமாகவே கடைபிடித்து வருகிறது. அவர்களது சொத்துக்களும் பெரும்பாலும் இவ்விதமான பாதுகாப்பின்மைக்கு உட்பட்ட சொத்துக்கள் தான்.
மிகப்பெரிய பெறுமதி கொண்ட சொத்துக்களை கையகப்படுத்த முடியாது. அவ்வாறு மிகப்பெரிய சொத்துக்களில் நீங்கள் முதலீடு செய்கின்ற போது அரசாங்கமே உங்களுடன் உடன்பாடொன்றுக்கு வரும்.
ஏனெனில் அவர்களின் நிலைமை இப்போது நாட்டுக்குள் எப்படியாவது டொலரை கொண்டு வர வேண்டும் என்பதாகவே காணப்படுகிறது” - என்றார்.
அவர் வழங்கிய சிறப்பு நேர்காணலின் முழுவடிவம் காணொளி வடிவில்,
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
