கொஹூவலை துப்பாக்கிச் சூடு தொடர்பில் வெளியாகும் தகவல்கள்!
கொஹூவலை பகுதியில் நேற்று (22.12.2025) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அதன்படி, குறித்த நபர் தற்போது வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள போதைப்பொருள் கடத்தல்காரரான அவிஷ்க என்பவருடன் நெருங்கிய தொடர்புகளை மேற்கொண்டு வந்துள்ளமை காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விசாரணை
குறித்த சம்பவம் தொடர்பில் கொஹூலை காவல்துறை மற்றும் கல்கிஸ்ஸை குற்றத் தடுப்புப் பிரிவினர் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொஹூவலை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட கொஹூவலை சந்தி மற்றும் நுகேகொடை சந்திக்கு இடைப்பட்ட பிரதேசத்தில் நேற்று (22.12.2025) இரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியிருந்தது.
குறித்த துப்பாக்கிச் சூட்டில் 25 வயதுடைய களுபோவில, போதியாவத்த பிரதேசத்தில் வசிப்பவர் என தெரியவந்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |