தமிழ் கட்சிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை
Sri Lankan Tamils
Tamils
Sri Lanka Politician
By Shalini Balachandran
அரசாங்கத்தின் ஆக்கிரமிப்பை ஏதிர்கொள்ள அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என வட மாகாண கடற்றொழில் பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை இன்று (06) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது கடலில் சட்டவிரோத தொழிலான ஒளிபாய்ச்சி மீன்பிடி அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடற்படை நடவடிக்கை
அதனை கட்டுப்படுத்த நீரியல் மற்றும் கடற்றொழில அமைச்சு, கடற்படை நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் ஆட்சியில் வரும் அரசாங்கங்கள் மக்களை ஏமாற்றி வருவதாகவும், இதனை எதிர்கொள்ள அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைநது போராட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
