ட்ரம்பின் வரி விதிப்பால் உச்சம் தொட்ட iPhone விலை
அமெரிக்க (America) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) வரி விதிப்பால் ஐபோன் விலைகள் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, ஐபோனின் சமீபத்திய மொடலைத் தயாரிப்பதற்கான செலவு 580 டொலரில் இருந்து 850 டொலராக உயரும் நிலை ஏற்பட்டுள்ளதாக தொழில்நுட்ப ஆய்வாளர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏனெனில், ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோனை சீனாவில் உற்பத்தி செய்கின்ற நிலையில் ட்ரம்பின் வரி விதிப்பு என்பது சீனாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 54 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.
தயாரிப்பு செலவு
இதனால், தயாரிப்பு செலவு அதிகரிப்பை ஈடு செய்ய, ஆப்பிள் நிறுவனம் தங்கள் ஐபோனின் விலையை இனி உயர்த்தும்.
இதனால், 256GB ஐபோன் 16 Pro விலை 1100 டொலரில் இருந்து 3500 டொலர் என உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வரி விதிப்பு என்பது வெளிநாட்டு பொருட்களின் விலையை அதிகரிப்பதன் மூலம் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதாகவே ஜனாதிபதி ட்ரம்ப் விளக்கமளித்துள்ளார்.
ஆப்பிள் நிறுவனம்
இருப்பினும், ஆப்பிள் நிறுவனம் அதன் சாதனங்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும்.
இது மட்டுமன்றி, அமெரிக்க மண்ணில் ஐபோன்களை தயாரிப்பதற்கு சிக்கனமான வழி இல்லை என்றே நிபுணர்களின் கருத்தாக உள்ள நிலையில், மேலும் ஐபோன் உற்பத்தியை அமெரிக்காவிற்கு மாற்றுவது என்பது சாத்தியப்படாத மிகப்பெரிய முயற்சி என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தற்போது சீனாவில் அசெம்பிளிங் செலவு சுமார் 30 டொலராகும் ஆனால் உற்பத்தி அமெரிக்காவிற்கு மாற்றப்பட்டால் இது பத்து மடங்கு உயரும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
