தவெக ஆட்சியமைக்காவிட்டால் போராட்டம் வெடிக்கும்: ஆளுநருக்கு கடும் எச்சரிக்கை
Vijay
Tamil nadu
Tamil Nadu Election 2026
TVK
By Shalini Balachandran
தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சியமைக்க ஆளுநர் உடனடியாக அழைக்க வேண்டும் எனத் தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு மிகப்பெரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பெரும்பான்மை
பெரும்பான்மை ஆதரவைப் பெற்றுள்ள கூட்டணியை ஆட்சியமைக்க தமிழக ஆளுநர் இதுவரை அழைக்காதது தமிழக மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தினர் அமைதியைப் பேணும் வகையில் செயல்பட்டு வரும் சூழலில், தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் இந்த எச்சரிக்கை அறிக்கையை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி