வாகன இலக்கத்தகடுகள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
நாட்டில் நீண்டகாலமாகத் தாமதமடைந்துள்ள வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
குறித்த விடயத்தைப் போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் எதிர்வரும் ஜூன் மாதம் பத்தாம் திகதி குறித்த பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இலக்கத் தகடுகள்
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “வாகன இலக்கத் தகடுகளை அச்சிடுவதற்காகப் புதிய நிறுவனம் ஒன்றுக்கு விலைமனு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தியோகபூர்வ ஒப்பந்தம் கடந்த மார்ச் மாதம் பத்தாம் திகதி அந்த நிறுவனத்துடன் கையெழுத்திடப்பட்டுள்ளது.

ஒப்பந்தத்தின் நிபந்தனைகளின்படி, ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்ட நாளிலிருந்து மூன்று மாத காலத்திற்குள் அச்சிடும் பணிகளை ஆரம்பிக்க வேண்டும்.
இதனடிப்படையில், ஜூன் மாதம் பத்தாம் திகதிக்குள் வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகளை அந்த நிறுவனத்தினால் மீள ஆரம்பிக்க முடியும்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |