அமெரிக்காவின் மத்தியஸ்த ஒப்பந்தத்தை நிராகரித்த ஹிஸ்புல்லா
லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை லெபனான் தரப்பு நிராகரிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஒப்பந்தம் கையெழுத்தான ஒரு நாள் கழித்த நிலையில், ஹிஸ்புல்லா அமைபின் தலைவர் நயீம் காசிம் இன்று அதனை நிராகரித்துள்ளார்.
மேலும், இது இஸ்ரேலிடம் சரணடைவதற்கு சமன் என்றும் அவர் விவரித்துள்ளார்.
பலமுறை அறிவிக்கப்பட்ட போர்நிறுத்தங்கள்
பலமுறை அறிவிக்கப்பட்ட போர்நிறுத்தங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் இருந்தபோதிலும், தொடர்ந்து நடைபெற்று வரும் பகைமைகளுக்கு சமீபத்திய உதாரணமாக, இஸ்ரேல் லெபனானின் தெற்குப் பகுதியில் ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தியது என்றும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

தொடர்தும் கருத்து வெளியிட்ட அவர், “பரந்த ஈரான் போருக்கு இணையாக நடந்து வரும் ஒரு மோதலால், பத்து லட்சத்திற்கும் அதிகமான லெபனான் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பரந்த போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக இரண்டு வாரங்களுக்கு முன்பு கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, லெபனானில் போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதாக வாஷிங்டன் உறுதியளித்ததாக ஹிஸ்புல்லாவும் ஈரானும் கூறுகின்றன.
வெள்ளிக்கிழமை ஒப்புக்கொள்ளப்பட்ட இந்தக் கட்டமைப்பு, லெபனான் இராணுவத்தை அங்கு நிலைநிறுத்துவதோடு, தெற்கு லெபனானின் சில பகுதிகளில் இருந்து இஸ்ரேல் படிப்படியாக வெளியேறுவதற்கும் வழிவகை செய்கிறது.
ஆனால், இஸ்ரேலியப் படைகள் தற்போதைக்கு விரிவாக்கப்பட்ட பாதுகாப்பு மண்டலத்தில் தங்கியிருக்க அனுமதிக்கப்படும்” என்றார்.
இந்நிலையில் லெபனான் அரசாங்கம், ஒருதலைப்பட்சமான சலுகைகளை வழங்கி லெபனானின் இறையாண்மையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் குற்றம் சாட்டியமை பதற்றத்தின் தீவிரத்தை மேலும் அதிகரிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 2 நாட்கள் முன்