மாணவர்களுக்கான பாதுகாப்புகளை சர்ச்சைக்குள் தள்ளியுள்ள ட்ரம்பின் குடியுரிமை குறைப்பு திட்டம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கொண்டுவந்துவந்துள்ள மாணவர்களின் உரிமைகள் குறித்து சட்டம் பெரும் சிக்கலை உறுவாக்கியுள்ளது.
அந்நாட்டின் மாணவர்களைப் பாகுபாட்டிலிருந்து பாதுகாக்கும் அமெரிக்க கல்வித் துறையின் குடிமை உரிமைகள் அலுவலகத்தின் (OCR) பல பிராந்திய அலுவலகங்கள் மூடப்பட்டதைத் தொடர்ந்து, மாணவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் பொறுப்பு மாநில அரசுகள் மீது அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம், கல்வித் துறையைச் சுருக்கி அதிகாரங்களை மாநிலங்களுக்கு மாற்றும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, OCR-இன் 12 பிராந்திய அலுவலகங்களில் ஏழை மூடியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகுபாடு தொடர்பான சிக்கல்
இதனால், பாகுபாடு தொடர்பான முறைப்பாடுகளை அமெரிக்க மத்திய அரசிடம் கொண்டு சென்ற குடும்பங்கள் தற்போது சிக்கல்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேரிலாந்து, பென்சில்வேனியா போன்ற சில மாநிலங்களில் குடிமை உரிமைகள் ஆணையங்கள் செயல்பட்டாலும், கல்வித்துறையில் நடைபெறும் பாகுபாடு தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்கும் முழுமையான அதிகாரம் அவற்றுக்கு இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலைமை மாநிலங்களுக்கு இடையே மாணவர்களின் உரிமைப் பாதுகாப்பில் ஏற்றத்தாழ்வை உருவாக்கியுள்ளது.
"மாணவர்களுக்கு கிடைக்கும் நிவாரணம் அவர்கள் வசிக்கும் மாநிலத்தைப் பொறுத்ததாக மாறியுள்ளது" என்று முன்னாள் OCR அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், பென்சில்வேனியாவில் பள்ளிகளில் நடைபெறும் உரிமை மீறல்களை விசாரிக்க புதிய மாநில அமைப்பை உருவாக்கும் மனு முன்வைக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 2 நாட்கள் முன்