அகதிகளை குறிவைத்த யுத்தத் தாங்கி! கோர முகத்தை காண்பித்த இந்தியப்படை அதிகாரி
1987 ஆம் ஆண்டு கொக்குவில் இந்துக் கல்லூரி அகதி முகாமில் சுமார் ஏழாயிரம் அகதிகள் வரையில் தங்கியிருந்தார்கள்.
மூன்றுமாடிக் கட்டிடத்தைக் கொண்ட அந்தக் கல்லூரியின் முகப்பில் அகதி முகாம் என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அறிவிப்புப் பலகை தொங்கவிடப்பட்டிருந்தது.
அங்கிருந்த கொக்குவில் மக்களுக்கு யாழ்ப்பாணத்தில் மற்றைய அகதி முகாம்கள் மீது இந்தியப் படையினர் வேண்டும் என்றே செல் தாக்குதல் நடத்தியிருந்த விடயம் தெரிந்திருக்கவில்லை.
அதனால், அகதி முகாம்களில் தஞ்சமடைந்திருப்பவர்களுக்கு ஆபத்து எதுவும் இருக்காது என்றே அவர்கள் நினைத்து கொண்டு இருந்துள்ளார்கள்.
எனினும், ஒக்டோபர் மாதம் 25ம் திகதி நண்பகல் 2 மணியளவில் இந்தியப் படையின் யுத்தத்தாங்கி ஒன்று அகதிமுகாம் வாசலில் வந்து நின்றது.
தஞ்சமடைந்திருப்பதால் ஆபத்து எதுவும் இருக்காது என நினைத்து தனது உயிரை பற்றிப்பிடித்துக் கொண்டிருந்த நம் உறவுகளுக்கு அதன் பின்னர் நடந்த அந்த கொடுர சம்பவம் இன்றும் ஈழப்போராட்டத்தின் கோரமுகத்தை அடையாளப்படுத்துகிறது.
அந்த வகையில் கொக்குவில் இந்துக் கல்லூரி அகதி முகாமில் அன்று இந்திய அமைதிப்படை நடத்திய மூர்க்கத்தனமான தாக்குதலை விவரிக்கிறது ஐபிசி தமிழின் அவலங்களின் அத்தியாயங்கள்....
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
