மும்பை அபார வெற்றி - பெங்களூர் அணியின் போட்டிக்காக காத்திருக்கும் மும்பை ரசிகர்கள்!
ஐ.பி.எல் போட்டிகளின் முதல் சுற்று ஆட்டங்கள் நிறைவு கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மிக முக்கியமான போட்டியொன்று தற்சமயம் நிறைவடைந்துள்ளது.
அந்தவகையில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதியிருந்தன.
அடுத்த சுற்று ஆட்டமான ப்ளெ ஓப் சுற்றுக்குள் நுழைவதற்கு குறித்த போட்டியானது மும்பை அணிக்கு மிகவும் முக்கியம் வாய்ந்ததாக இருந்தது.
மும்பை வெற்றி
இந்தநிலையில், முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 200 ஓட்டங்களை பெற்றிருந்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 201 ஓட்டங்களை பெற்று வெற்றிபெற்றுள்ளது.
அந்தவகையில், மும்பை இந்தியன்ஸ் அணி 12 பந்துகள் மீதம் இருக்க 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ப்ளெ ஓப் சுற்று
இந்த வெற்றியின் மூலம் தற்போதைய புள்ளி பட்டியலின் அடிப்படையில் மும்பை அணியானது 4 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இருப்பினும், இன்றையதினம் நடைபெறவுள்ள மற்றுமொரு ஆட்டத்தில் பெங்களூர் மற்றும் குஜராத் அணிகள் மோதவுள்ளதுடன், அந்த போட்டி முடிவுகளின் பின்னரே மும்பை அணியின் ப்ளெ ஓப் சுற்றுக்கான வாய்ப்பு உறுதியாகும்.
பெங்களூர் அணி குறித்த போட்டியில் வெற்றி பெறுமாக இருந்தால், ஓட்ட விகித சராசரியின் அடிப்படையில் பெங்களூர் அணி அடுத்த சுற்றுக்குள் நுழைந்து விடும்.
ஒருவேளை, பெங்களூர் அணி தோல்வியடைந்தால், மும்பை அணி அடுத்த ப்ளெ ஓப் சுற்றுக்குள் இலகுவாக நுழைந்து விடும்.
