விறுவிறுப்பான கட்டத்தில் ஐபிஎல் - சென்னை அணியுடன் மோதப்போகும் அணி எது..!
ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை அணியுடன் மோதப்போகும் அணி எது என்பதை தீர்மானிக்கும் 2ஆவது தகுதிச்சுற்று போட்டி இன்று(26) நடைபெற இருக்கிறது.
இதில் குஜராத் டைட்டன்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகிறது.
இந்தப் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத் மைதானத்தில் நடைபெறுகிறது.
ஐபிஎல் திருவிழா
பரபரப்பான ஐபிஎல் தொடர் நாளை மறுநாளுடன் நிறைவு பெறுகிறது. கடந்த மார்ச் 31 ஆம் திகதி தொடங்கிய ஐபிஎல் திருவிழா கிரிக்கெட் ரசிகர்களுக்கு கடந்த ஒன்றரை மாதங்களாக கொண்டாட்டமாக இருந்தது.
10 அணிகள் பங்கேற்ற ஐபிஎல் தொடரில் குஜராத், சென்னை, லக்னோ, மும்பை ஆகிய அணிகள் பிளே ஒஃப் சுற்றுக்குள் சென்றது. இதில் மே 23 ஆம் திகதி நடந்த முதல் தகுதிச்சுற்று போட்டியில் குஜராத் அணியை சென்னை அணி 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நேரடியாக இறுதிப் போட்டிக்கு சென்றது.
The final frontier is one step away and we've got a hurdle to clear at our home ?️
— Gujarat Titans (@gujarat_titans) May 26, 2023
Here's a glimpse into our Titans' preparation ahead of this ??? ????? against MI also featuring some much-needed motivation from @vijayshankar260 ??
For more exclusive videos, head to… pic.twitter.com/RZnjM1P6N7
இதனைத் தொடர்ந்து மே 24 ஆம் திகதி நடந்த விலகல் போட்டியில் லக்னோ அணியை மும்பை அணி 81 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது தகுதிச்சுற்று போட்டிக்கு தகுதி பெற்றது.
இந்த போட்டியில் மும்பை அணி, முதல் தகுதிச்சுற்று போட்டியில் தோற்ற குஜராத் அணியுடன் மோதுகிறது.
குஜராத் VS மும்பை
ஹார்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி கடந்தாண்டு அறிமுகமாகி வாகையர் பட்டத்தை வென்றது.
அதேசமயம் 5 முறை சாம்பியனான மும்பை கடந்த இரு சீசன்களாகவே தட்டுதடுமாறி வருகிறது.
இப்படியான நிலையில் இரு அணிகளும் 2 சீசன்களையும் சேர்த்து 3 ஆட்டங்களில் மட்டுமே நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் 2 ஆட்டங்களில் மும்பை அணி வெற்றி பெற்றுள்ளது.
நடப்பு சீசனிலும் 2 லீக் ஆட்டங்களில் குஜராத், மும்பை அணிகள் மோதி தலா ஒரு வெற்றியைப் பெற்றது.
வலுவான நிலையில் குஜராத்
குஜராத் அணியை பொறுத்தவரை லீக் போட்டியில் கெத்தாக முதலிடம் பிடித்து முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்தது. ஆனால் முதல் தகுதிச்சுற்று போட்டியில் துடுப்பாட்ட வீரர்கள் சொதப்பியதால் அந்த அணி தோல்வியை தழுவியது. குறிப்பாக துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சில் குஜராத் அணி வலுவாக உள்ளது.
தொடக்க வீரர் சுப்மன் கில் ஓட்டங்களை குவிக்கும் இயந்திரமாகவே மாறி விட்டார். பந்துவீச்சில் முகம்மது ஷமி, மோகித் ஷர்மா, ரஷித்கான் என மும்பை அணியை மிரட்டக் காத்திருக்கின்றனர். மும்பை இந்தியன்ஸ் அணியின் துடுப்பாட்ட வரிசையை கதறவிட குஜராத் அணி இன்று இவ்வாறான திட்டத்தை பயன்படுத்தும் எனக் கருதப்படுகிறது.
உள்ளூர் மைதானம் என்பதால் குஜராத் அணிக்கு இப்போட்டி சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம் லீக் ஆட்டங்களில் சரியான நேரத்தில் எழுச்சி பெற்ற மும்பை அணி கடந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடியது.
Getting ready for the battle tonight! ?#OneFamily #GTvMI #MumbaiMeriJaan #MumbaiIndians #TATAIPL #IPL2023 pic.twitter.com/5MdLcInrG0
— Mumbai Indians (@mipaltan) May 26, 2023
இன்றைய ஆட்டத்தில் மும்பை அணி வெற்றி பெற்றால் 16 சீசன்களில் 7ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை பெறும்.
நடப்பு சம்பியனா? முன்னாள் சம்பியனா? எந்த அணி இறுதிப்போட்டிக்குச் செல்லும் என்ற கேள்வி ரசிகர்களிடத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.