ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே இன் வியூகம்..! களமிறங்கும் புதிய வீரர்கள்
இந்தியாவில் வருடா வருடம் பலத்த எதிர்பார்ப்புடன் கொண்டாடப்படும் ஐபில் தொடரில் நடப்பு சாம்பியனாக விளங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்த ஆண்டுக்கான ஆயத்தங்களை மேற்கொண்டு வருகின்றது.
உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக ஐபிஎல் போட்டிகள் நிறைவடையவுள்ளன. இதனால் ஐபிஎல் 2024 மார்ச் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல் தொடரை முன்னிட்டு மினி ஏலம் வரும் 19 ஆம் திகதி டுபாயில் நடைபெறயிருக்கின்றது.
ஐபிஎல் மினி ஏலம்
இதற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் தங்கள் அணி வீரர்களின் பட்டியலை தக்க வைத்துக் கொண்டும், விடுவித்தும் மாற்றங்களை செய்து வருகின்றது.
இந்தநிலையில், இம்மாதம் 19 ஆம் திகதி நடைபெறவுள்ள ஐபிஎல் மினி ஏலத்தில் சென்னை அணியின் வியூகம் என்னவாக இருக்கும் என்பது குறித்து விவாதங்கள் எழத் தொடங்கியுள்ளன.
பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்ட வீரர்களை விடுவித்துள்ளதால் சென்னை அணியிடம் தற்போது ரூ. 31.4 கோடி கையிருப்பு உள்ளது.
தமிழக வீரர்
அதிக தொகை கைவசம் இருப்பதால் நியூசிலாந்தை சேர்ந்த இளம் ஆட்டக்காரர் ரச்சின் ரவிந்திராவுக்கு குறி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோன்று தமிழக வீரர் ஷாரூக்கானை அணியில் எடுக்கவும் சிஎஸ்கே நிர்வாகம் ஆர்வம் காட்டலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேவேளை, உலகக்கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை காட்டிய நியூசிலாந்தின் டேரில் மிட்செல், அவுஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் ஆகியோரில் ஒருவர் சென்ணை அணியில் எடுக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
you may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |