மும்பைக்கு எதிரான போட்டியில் இருந்து விலகியுள்ள முக்கிய டெல்லி அணி வீரர்!
Rohit Sharma
Delhi Capitals
Mumbai Indians
Mitchell Marsh
IPL 2024
By Shadhu Shanker
ஐபிஎல் தொடரிலிருந்து டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் முக்கிய வீரர் மிட்செல் மார்ஷ் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் இருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நாளை(6) மதியம் 3.30 மணியளவில் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தயாராகி வருகின்ற நிலையில் சகலதுறைஆட்டக்காரர் மிட்செல் மார்ஷ் காயம் காரணமாக விலகியுள்ளார்.
முன்னணி வீரர் விலகல்
டெல்லி அணி இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
எனவே இவரது விலகல் டெல்லி அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இவ்வருட ஐபிஎல் தொடரிலிருந்து காயம் காரணமாகவும் தனிப்பட்ட காரணங்களுக்காகவும் பல வீரர்கள் வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி