ஐபிஎல் தொடரில் ஆர்.சி.பி அணியின் வெற்றி தொடருமா! வெளியேற போவது யார்
2024 ஐபிஎல் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ராஜஸ்தான் ரோயல்ஸ்(rajasthan royals) - ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) அணிகளுக்கிடையிலான எலிமினேட்டர் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
அகமதாபாத்தில் உள்ள மைதானத்தில் இன்று(22) 7.30 மணிக்கு இந்த போட்டியானது ஆரம்பமாகவுள்ளது.
ஐபிஎல் (Ipl) தொடரில் ஆரம்பத்தில் சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்த ராஜஸ்தான் அணி கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் 4 போட்டிகளில் தோல்வி பெற்றுள்ளது.
எலிமினேட்டர் போட்டி
மேலும் கடைசியாக கொல்கத்தா அணியுடன் நடைபெறவிருந்த லீக் போட்டியும் மழையால் இரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கு தலா 1 புள்ளி வழங்கப்பட்டது.
ஆரம்பத்தில் பெரும் பின்னடைவை சந்தித்து புள்ளி பட்டியலில் 10வது இடத்தில் இருந்த ஆர்சிபி, கடைசியாக விளையாடிய 6 போட்டிகளிலும் வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு வந்துள்ளது.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானம் இரண்டாவதாக துடுப்பபெடுத்தாடுவதற்கு உகந்ததாகப் பார்க்கப்படுகிறது.
ராஜஸ்தானுடன் இன்று மோதல்
நடப்பு ஐபிஎல் தொடரில் மொத்தம் 6 போட்டிகள் இந்த மைதானத்தில் நடைபெற்றுள்ள நிலையில் அதில் 4 போட்டிகள் இரண்டாவதாக துடுப்பெடுத்தாடிய அணிகளே வெற்றிப்பெற்றுள்ளன.
இதில் 4 போட்டிகளில் இரண்டாவதாக துடுப்பெடுத்தாடிய செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது.
இதற்கு முன்னதாக நடைபெற்ற தகுதிகாண் போட்டியிலும் இரண்டாவதாக துடுப்பபெடுத்தாடிய அணிதான் வெற்றி பெற்றது.
நாணயசுழற்சியில் வெல்லும் அணி
இதனால் இன்றைய போட்டியில் நாணயசுழற்சியில் வெல்லும் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரு அணிகளும் இதுவரை 31 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில் இதில் 15 முறை ஆர்சிபியும், 13 முறை ராஜஸ்தான் அணியும் வெற்றி பெற்றுள்ளது.
குறிப்பாக பிளே ஆஃப் சுற்றில் இரண்டு முறை மோதியுள்ள நிலையில் இதில் இரு அணிகளும் தலா 1 வெற்றியை பதிவு செய்து உள்ளனர்.
பெங்களூருவின் வெற்றி
இதுவரை 6 முறை பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு முறை கோப்பையை வெற்றியுள்ளது.
அதே போல் 9 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள ஆர்சிபி அணி 3 முறை இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. ஆனால் 16 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் இதுவரை அந்த அணி கோப்பையைவென்றதே கிடையாது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்குமா ஆர்சிபி என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்த எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணி வரும் மே24 ஆம் திகதி ஐதராபாத் அணியை சென்னையில் எதிர்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |