ஐபிஎல் 2025 - புதிய ஜெர்சியை அறிமுகம் செய்த மும்பை இந்தியன்ஸ்
2025 நடைபெறவுள்ள ஐபிஎல் (IPL) தொடருக்கான புதிய ஜெர்சியை மும்பை இந்தியன்ஸ் அணி (Mumbai Indians) அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
மொத்தம் பத்து அணிகள் பங்கேற்கும் ஐ.பி.எல். ரி20 கிரிக்கெட் தொடர் எதிர்வரும் மார்ச் 22 ஆம் திகதி ஆரம்பமாக உள்ளது.
இந்தமுறை அணிகளிடையே 74 போட்டிகள் இந்தியா முழுக்க 13 நகரங்களில் நடைபெற உள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணி
ஐ.பி.எல். தொடர் தொடங்க இன்னும் சில காலமே எஞ்சியுள்ள நிலையில், ஒவ்வொரு அணியும் அதற்கு தயாராகும் பணிகளில் மும்முரமாக ஈடுபட துவங்கியுள்ளன.
அந்த வரிசையில், மும்பை இந்தியன்ஸ் அணி 2025 ஐ.பி.எல். தொடருக்கான ஜெர்சியை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
நீலம் மற்றும் தங்க நிறங்களை கொண்டிருக்கும் புதிய ஜெர்சி அணிந்தபடி வீரர்கள் காட்சியளிக்கும் காணொளியை மும்பை இந்தியன்ஸ் அணி வெளியிட்டுள்ளது.
இந்த வீடியோவில் வீரர்கள் புதிய ஜெர்சியில் இருப்பதோடு, மும்பை அணியின் கொடி மற்றும் கிட் உள்ளிட்டவையும் காண்பிக்கப்பட்டுள்ளது.
Mumbai Indians' Jersey for IPL 2025!#MumbaiIndians #RohitSharma #ShuryakumarYadav #HardikPandya #JaspritBumrah pic.twitter.com/kL7LbjKAxO
— CRICKETNMORE (@cricketnmore) February 21, 2025
சின்ன தல சுரேஷ் ரைனா
இதேவேளை, சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரைனா (Suresh Raina) மீண்டும் அணியில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போது வர்ணனையாளராக செயற்பட்டு வரும் ரைனாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கெனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அஸ்வின் திரும்பியுள்ள நிலையில், ரைனாவும் அணியுடன் இணைவது இரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
