ஐபிஎல் ஏலத்தில் சாதனை படைத்த பிரபல வீரர்
World
IPL 2024
By Dilakshan
ஐபிஎல் ஏல வரலாற்றிலேயே அதிக விலை கொடுத்து அவுஸ்ரேலிய அணியை சேர்ந்த வீரர் மிட்செல் ஸ்டார்க் வாங்கப்பட்டுள்ளார்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் அவுஸ்ரேலிய அணி வீரர் ஸ்டார் மிட்செல் 24.75 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டார்.
அத்தோடு, அவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியுள்ளது.
அவுஸ்ரேலிய அணியின் தலைவர்
இந்நிலையில், இதற்கு முன்னராக அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட வீரராக அவுஸ்ரேலிய அணியின் தலைவர் கம்மின்ஸ் அறிவிக்கப்பட்டதையடுத்து அதனை ஸ்டார் மிட்செல் முறியடித்துள்ளார்.
இந்த ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கம்மின்ஸை 20.5 கோடி ரூபாய்க்கு வாங்கியது.
அதேவேளை, இந்த ஐபிஎல் ஏலத்தில் இங்கிலாந்து அணி வீரர் சாம் கரண் ரூ.17.5 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளதுடன் கேமரூன் கிரீன் ரூ.17.50 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி