சிஎஸ்கேயின் புதிய வியூகம்: அதிக தொகையில் உள்நுழையும் மற்றுமொரு பலம்
கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலோடு எதிர்ப்பார்த்த இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) மினி ஏலம் இன்றைய தினம் நடைபெற்று வருகிறது.
குறித்த ஏலமானது இன்று (19) டுபாயில் உள்ள கோகோ கோலா அரங்கில் இடம் ஆரம்பமாகியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ், டில்லி கெபிடல்ஸ், லக்னவ் சூப்பர் ஜெயிண்ட்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய 10 அணிகளும் இந்த மினி ஏலத்தில் பங்கேற்றுள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
இதனடிப்படையில் இதுவரை சென்னை அணியின் முன்னாள் வீரரான ஷர்துல் தாகூரை 4 கோடிக்கு சென்னை அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
இவர் கடந்த வருடம் நடந்த மெகா ஏலத்தில் டெல்லி கெபிடல்ஸ் அணி இவரை ஏலத்தில் வாங்கியது.
இந்த மினி ஐபிஎல் ஏலத்திற்காக இவரை விடுவித்திருந்த நிலையில் 2 கோடி அடிப்படை விலையாக கொண்ட ஷர்துல் தாகூரை அணியில் எடுக்க சன்ரைசர்ஸ் மற்றும் சென்னை அணிகள் கடும் போட்டியிட்ட நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவரை தட்டி தூக்கியது.
நடந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1.8 கோடிக்கு நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திராவை வாங்கி உள்ளது.
ரச்சின் ரவீந்திரா
உலகக்கிண்ணத் தொடரில் நியூசிலாந்து அணிக்காக அதிரடியாக ஆடிய ரச்சின் ரவீந்திரா எந்த அணிக்கு செல்வார் என ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர்.
டேரில் மிட்செலுக்கும் தீவிர ஏலப் போர் நடந்ததை தொடர்ந்து இறுதியில் அவரை 14 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வாங்கியது.
இலங்கை சுழற்பந்து வீச்சாளரான வனிந்து ஹரசங்க 1.50 கோடி ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியுள்ளது.
இங்கிலாந்து வீரர் ஹாரி புருக்கை டெல்லி கெப்பிடல்ஸ் அணி 4 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
மேற்கிந்திய வீரர் ரோவ்மேன் பவல்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மேற்கிந்திய வீரர் ரோவ்மேன் பவலைஎடுக்க கடும் போட்டி போட்ட நிலையில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 7.4 கோடி ரூபாய்க்கு ரோவ்மேன் பவலை வாங்கியுள்ளது.
மேலும் அவுஸ்திரேலிய அணி வீரர் டிராவிஸ் ஹெட் ஐ 6.80 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத். அணி வாங்கியுள்ளது. 50 இலட்சம் அடிப்படை விலையில் அஸ்மதுல்லா உமர்சாயை குஜராத் அணி வாங்கியுள்ளது.
ஹர்ஷல் படேலை பஞ்சாப் கிங்ஸ், அணி 11.75 கோடிக்கு வாங்கியுள்ளது.
அவுஸ்திரேலிய அணி தலைவர் பேட் கம்மின்ஸ் 20.50 கோடிக்கு ஏலம் விடப்பட்டுள்ளார்.
இவரை சன்ரைசர்ஸ் அணி வாங்கியுள்ளது.
இதற்கு முன்னதாக 18.50 கோடிக்கு இங்கிலாந்து வீரர் சாம் கரனை பஞ்சாப் கிங்ஸ், அணி வாங்கியதே அதிகமாக வாங்கப்பட்ட ஏல தொகையாக இருந்தது. அந்த சாதனை இன்று முறியடிக்கப்பட்டுள்ளது.
உமேஷ் யாதவ்
ஆர்சிபி அணி ரூ. 5 கோடிக்கு யஷ் தயாலை ஏலத்தில் எடுத்துள்ளது.
சென்னை அணி ரூ.8.40 கோடிக்கு சமீர் ரிஸ்வியை ஏலத்தில் எடுத்துள்ளது.
ஷிவம் மாவி ரூ.6.40 கோடிக்கு ஏலம் போனார். இவரை லக்னோ அணி ஏலம் எடுத்தது. உமேஷ் யாதவ் ரூ.5.80 கோடிக்கு ஏலம் போனார்.இவரை குஜராத் அணி ஏலம் எடுத்தது.
லக்னோ மற்றும் ஆர்சிபி அணிக்கு இடையேயான போட்டியில் அல்ஜாரி ஜோசஃபை ஆர்சிபி அணி ரூ.11.50 கோடிக்கு ஏலம் எடுத்தது.
ஹாரி ப்ரூக்
சேத்தன் சக்காரியா ரூ.50 லட்சத்துக்கு ஏலம் போனார். இவரை கேகேஆர் அணி ஏலம் எடுத்தது. ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் ரூ.50 லட்சத்துக்கு ஏலம் போனார். இவரை டெல்லி அணி ஏலம் எடுத்தது.
கிறிஸ் வோக்ஸ் ரூ.4.20 கோடிக்கு ஏலம் போனார்.இவரை பஞ்சாப் அணி ஏலம் எடுத்தது.
ரூ.5 கோடிக்கு தென் ஆப்பிரிக்கா வீரர் ஜெரால்ட் கோட்ஸி ஏலம் போனார்.அவரை மும்பை அணி விலைக்கு வாங்கியது. அவுஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட்டை 6.8 கோடி ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் எடுத்துள்ளது.
இங்கிலாந்தின் ஹாரி ப்ரூக்கை 4 கோடி ரூபாய்க்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் எடுத்துள்ளது. கார்த்தி தியாகி ரூ.60 லட்சத்துக்கு ஏலம் போனார். இவரை குஜராத் அணி ஏலம் எடுத்தது.
ஷாருக்கான்
தமிழக வீரரான சித்தார்த் ரூ.2.40 கோடிக்கு ஏலம் போனார்.
இவரை லக்னோ அணி ஏலம் எடுத்தது. தமிழக வீரர் ஷாருக்கான் ரூ. 7.40 கோடிக்கு ஏலம் போனார்.
இவரை குஜராத் அணி ஏலம் எடுத்தது. குமார் குஷாக்ரா ரூ. 7.2 கோடிக்கு ஏலம் போனார். இவரை டெல்லி அணி ஏலம் எடுத்தது.
ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகையில் மிட்செல் ஸ்டார்கை ரூ.24.75 கோடிக்கு ஏலம் போனார் இவரை கொல்கத்தா அணி வாங்கியது.
ஜோஷ் இங்கிளிஸ்,குசல் மெண்டிஸ்,லாக்கி ஃபெர்குசன் ,தமிழக வீரர் முருகன் அஸ்வின் ,ஆகியோர் ஏலம் போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |